மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…! துடைப்பத்தைச் சரியாக பயன்படுத்தினால் இவ்வளவு நன்மையா ? தெரிந்து கொள்ளுங்கள்….

இளைஞர் மீது பசு பாதுகாவலர்கள் நடத்திய கொடூர தாக்குதல்.. போலீஸார் முன்னிலையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..

மாட்டிறைச்சியை கொண்டு செல்வதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை போலீசார் முன்னிலையில் பசு பாதுகாவலர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பசு பாதுகாவலர்கள்

ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள பட்ஷாபூர் என்ற கிராமத்தில் சென்று கொண்டிருந்த ஒரு லாரியை நேற்று காலை பசு பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். அந்த லாரியில் மாட்டிறைச்சி கடத்தப்படுவதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், லாரியை ஓட்டிய லக்மேன் என்ற இளைஞர் மீது பசு பாதுகாவலர்கள் கும்பல் தாக்குதல் நடத்தினர். அந்த இடத்தில் போலீசார் இருந்தும், இளைஞர் மீதான தாக்குதலை அவர்கள் தடுத்து நிறுத்தவில்லை.

சுத்தியல் உள்ளிட்ட கடுமையான ஆயுதங்களை கொண்டு அந்த இளைஞரை தாக்கியதால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தலையில் வழியும் ரத்தத்துடன், தன்னை விட்டுவிடும் படி எவ்வளவோ கெஞ்சி கேட்டும், அந்த கும்பல் விடுவதாக இல்லை. லக்மேனை உதைப்பதும், தாக்குதவதும் போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

l7vg2it4 gurgaon mob attack ndtv

ஒருகட்டத்தில் இந்த தாக்குதலை போலீசார் தடுத்து நிறுத்த முயற்சித்த போது, பசு பாதுகாவலர்கள் போலீசாரின் வாகனங்களையும் சேதப்படுத்தினர். அதன்பிறகு ஒருவழியாக லக்மேன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் முகம் தெளிவாக தெரிந்தும் கூட, அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதல் என்று போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனினும் இதுகுறித்து இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை.

1newsnationuser1

Next Post

விசாகப்பட்டினம் ஷிப்யார்டில் ராட்சச கிரேன் விழுந்து விபத்து.. 10 பேர் உயிரிழந்த சோகம்..

Sat Aug 1 , 2020
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கப்பல் கட்டும் தளத்தில் ராட்சச கிரேன் விழுந்த விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர். ஆந்திராவின் கடலோர நகரத்தில் அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் என்ற கப்பல் கட்டும் தளம் செயல்பட்டு வருகிறது. அங்கு கப்பல் கட்டுதல், கப்பல் பழுதுபார்ப்பு, நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானம் மற்றும் சுத்திகரிப்பு மற்றும் கடல் மற்றும் கடலோர கட்டமைப்புகளின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் ஆகியவற்றின் தேவைகளை பூர்த்தி செய்வதில் […]
ராட்சச கிரேன்

You May Like