மழையால் கிரிக்கெட் பாதிப்பு…இந்தியாவா? வங்கதேசமா?

டி20 உலககோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதிய நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

டி.20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்துள்ளது. 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வங்கதேச அணி களமிறங்கியது. 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் குவித்தது. அந்த அணியைச் சேர்ந்த லிட்டன் தாஸ் 26 பந்துகளில் 59 ரன்கள் குவித்தார். ஷட்டோ 7 ரன் எடுத்து களத்தில் உள்ளார்.

ஏழு ஓவர்கள் முடிந்த நிலையில் மழை வந்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 78 பந்துகளில் 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வங்கதேச அணி உள்ளது.இந்தி அணிக்கு இது சற்று கடினமான காலக்கட்டம் . 10 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என்ற  சூழ்நிலையில் உள்ளது.

மழை வேகமாக பெய்து வருவதால் ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல் உள்ளது. மழை நீடிக்கும் பட்சத்தில் டக்ஸ்வொர்த் முறையில் வெற்றி அறிவிக்கப்படும். அப்படி வெற்றி அறிவிக்கும்பட்சத்தில் வங்கதேச அணிக்கு வெற்றி வாய்ப்பு செல்லும். இந்திய அணியை விட 17 ரன்கள் முன்னிலையில் உள்ளது வங்கதேச அணி. எனவே மழை நிற்கவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Post

அல்சரால் மாணவி உயிரிழந்தாரா? சிகிச்சையால் உயிரிழந்தாரா? பெற்றோர் கதறல்…

Wed Nov 2 , 2022
சென்னையில் பதினைந்து வயது பள்ளி மாணவி தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்ததாக குற்றம்சாட்டி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த ரமேஷ்-வசந்தி தம்பதியினரின் ஒரே மகள் நந்தினி. திடீரென இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மண்ணடியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக்கு நந்தினியை அழைத்துச் சென்றனர். சிறுமிக்கு அல்சர் பிரச்சனையால் வலி வந்ததாகவும் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என […]

You May Like