சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) தனது குழு மருத்துவர் மது தொட்டப்பிலிலை புதன்கிழமை பதிவிட்டிடுருந்த சமூக ஊடக பதிவுக்கும் நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விளக்கமளித்துள்ளது.

செவ்வாயன்று, கிழக்கு லடாக்கில் சீன இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலின் போது உயிர் இழந்த 20 இந்திய ராணுவ வீரர்கள் மரணம் குறித்து தொட்டப்பிலில் ஒரு ட்வீட் வெளியிட்டிருந்தார். அதில் “சவப்பெட்டிகள்” PM CARES “ஸ்டிக்கருடன் திரும்பி வருவார்கள் என்று ஆர்வமாக இருக்கிறீர்களா?”
என்று குறிபிட்டிருந்தார். அவரது ட்வீட் பலரும் படித்த பின்பு டெலிட் செய்யப்பட்டது.

இந்த பதிவு நிறைய கவனத்தை ஈர்த்தது. உடனடியாக ஐபிஎல் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் மோசமான விமர்சனம் என்று குறிபிட்டது. பின்னர், சி.எஸ்.கே ட்விட்டரில், மது தொட்டப்பில்லால் பதிவைப் பற்றி தங்களுக்குத் தெரியாது என்று கூறினர். இப்போது அவர் அணி மருத்துவர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
“சென்னை சூப்பர் கிங்ஸ் மேனேஜ்மென்ட் டாக்டர் மது தொட்டபில்லிலின் தனிப்பட்ட ட்வீட்க்கும் நிர்வாகத்துக்கும் சம்பந்தம் இல்லை. அவர் டீம் டாக்டர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று சிஎஸ்கே ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது. “சென்னை சூப்பர் கிங்ஸ் அவரது ட்வீட்டுக்காக வருத்தப்படுகிறது. இது நிர்வாகத்தின் அறிவு இல்லாமல் மற்றும் மோசமான சுவை கொண்டது.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் திங்களன்று சீன இராணுவத்துடன் ஏற்பட்ட எல்லை மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததை இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது, அவர்களில் பெரும்பாலோர் “அதிக உயரமுள்ள நிலப்பரப்பில் பூஜ்ஜிய வெப்பநிலைக்கும் குறைவான இடத்தில் காயங்களுக்கு ஆளாகி பின்னர் இறந்துள்ளனர். 1975 க்குப் பிறகு சீன இராணுவத்துடன் வன்முறை மோதலில் ஒரு இந்திய சிப்பாய் விபத்துக்குள்ளான முதல் சம்பவம் இது. அருணாச்சல பிரதேசத்தின் துலுங் லாவில் பதுங்கியிருந்து நான்கு இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

தற்போது நடந்த தாக்குதல் சம்பத்தில் பலரும் படுகாயகளுடன் சிக்கிசை பெற்று வரும் சூழலில் மேலும் பலி எண்ணிக்கை உயரும் எனவும் அஞ்சப்படுகிறது. சீனா தரப்பில் 43 வரை இறப்பு எண்ணிக்கை இருக்கும் என இந்திய இராணுவத்தால் தெரிவிக்கிப்பட்டுள்ளது.