உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்.. அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. "உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணேன்"…! ஆனா, நீ..! வனிதாவை துரத்திவிட்ட பீட்டர் பால்

சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்..?

கொரோனா வைரஸ் காரணமாக பலமுறை ஒத்திவைக்கப்பட்ட இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. இன்று தொடங்கி வரும் நவம்பர் மாதம் 10ம் தேதி வரை அபுதாபி,துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் ஷர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

சிஎஸ்கே

இதுவரை நடைபெற்ற சீசன்களில் சென்னை மற்றும் மும்பை அணிகள் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 18 முறை மும்பை அணியும் 12 முறை சென்னை அணியும் வெற்றிவாகை சூடியுள்ளன. ஐபிஎல் கோப்பையை பொறுத்தவரை மும்பை அணி 4 முறையும் சென்னை அணி 3 முறையும் வெற்றிபெற்றுள்ளதால், இன்று நடைபெறும் போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிஎஸ்கே அணியில் இருந்து ரெய்னா, ஹர்பஜன் ஆகியோர் விலகி உள்ள நிலையில், சென்னை அணி யாரை எல்லாம் களத்தில் இறக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அணி செய்த தவறு, தற்போது அந்த அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது.

Thala

ஆம்.. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில், தோனி, ரெய்னா உள்ளிட்ட வீரர்களை மீண்டும் தக்கவைத்து கொண்டாலும், அஸ்வின் உள்ளிட்டோரை கழற்றி விட்டது. அந்த ஆண்டு இளம் வீரர்கள் களமிறக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹீர், டூ பிளசிஸ், உட்பட பலரும் 30 வயதை கடந்தவர்களாகவே இருந்தனர்.

மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு அணிகளில் பெரும்பாலும் இளம் வீரர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், சென்னை அணியில் மட்டும் வயது அதிகமானவர்கள் இருந்தார்கள். இதனால் மற்ற அணிகளின் ரசிகர்கள், சென்னை அணியை டாடி ஆர்மி, முதியோர் மறுவாழ்வு மையம் என கிண்டல் செய்து வந்தனர். எனினும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு அணியின் பயிற்சியாளர் ஸ்டிபன் பிளமிங் அப்போதே விளக்கமளித்திருந்தார்.

அதாவது இளம் வீரர்களை கண்டுபிடிப்பதற்கான போட்டி ஐபிஎல் கிடையாது. அதற்கு ரஞ்சி கோப்பை போன்ற போட்டிகள் உள்ளன. இதில் கோப்பையை வெல்வது மட்டுமே இலக்கு. எனவே இளம் வீரர்களை எடுத்து, அவர்களுக்கு பயிற்சி அளிப்பதை விட, அனுபவம் வாய்ந்த வீரர்களை எடுப்பது சிறந்தது” என்று கூறிருந்தார்.

23dhoni dad army

எனினும் 2 ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு அவமானங்களையும், ஏளனங்களையும் சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2018-ல் கோப்பை வென்றது. அதேபோல் 2019-ம் ஆண்டிலும் இறுதிப் போட்டி வரை சென்னை அணி சென்றது. ஆனால் வெற்றி பெறவில்லை. அப்போதே சென்னை அணிக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதாவது 2018, 2019 ஒ.கே, அடுத்து வரும் ஆண்டுகளில் வயதான வீரர்களை வைத்து எப்படி ஆடுவீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இந்த வயதான வீரர்கள் 2020-ல் எப்படி பார்மில் இருப்பார்கள்.. இது சிறந்த முடிவு கிடையாது எனவும் பல்வேறு நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

2018-ல் சென்னை அணி எடுத்த முடிவு தற்போது அந்த அணிக்கு எதிராக திரும்பியுள்ளது. சென்னை அணி வீரர்கள் பலரும் இப்போது ஃபார்மில் இல்லாதாதே காரணம்.. வாட்சன், தோனி, அம்பதி ராயுடு உள்ளிட்ட பல வீரர்களும் பார்மில் இல்லை எனவும், ஜடேஜா மீது மட்டுமே ஓரளவு நம்பிக்கை உள்ளதாகவும் கூறப்படுகிறது. எல்லாரும் வயதான வீரர்கள் என்பதால், யாருக்காவது அடிப்பட்டால், இளம் வீரர்கள் களத்தில் சொதப்ப வாய்ப்புள்ளது. அதேபோல் ஸ்பின் பிட்ச் மைதானத்தில் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், ஸ்பின் பவுலர்கள் பார்மில் இல்லாதததும் சிக்கல் தான் என்கின்றனர்.

இவை எல்லாவற்றிற்கும் 2018-ம் ஆண்டில் சிஎஸ்கே அணி சரியாக ஏலம் எடுக்காததே காரணம் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் இன்று நடைபெற உள்ள போட்டியில் சிஎஸ்கே அணியில் எந்த வீரரை எந்த இடத்தில் களமிறக்க போகிறார்கள்.. என்பதில் பெரும் குழப்பம் நீடித்ததாகவும் தெரிகிறது. எனினும் இன்றைய போட்டியின் முடிவில் சென்னை அணி எந்தளவுக்கு பார்மில் இருக்கிறது என்பது தெரியவரும்..

1newsnationuser1

Next Post

வேளாண் மசோதா... அரசியலாக்க வேண்டாம்... முதல்வர்!

Sat Sep 19 , 2020
அரசியல் காரணங்களுக்காக வேளாண் மசோதாக்களை மு.க.ஸ்டாலின் எதிர்க்கிறார் என்றும் இதுபோன்ற சட்டத்தை இதற்குமுன் அதிமுக ஆட்சியில் அமல்படுத்தியபோது ஸ்டாலின் எதிர்க்கவில்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளை கட்டாயப்படுத்தவோ, பாதிக்கும் வகையிலோ வேளாண் மசோதாவில் ஷரத்துகள் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பஞ்சாப் போன்ற மாநிலங்களில் உள்ள நிலை தமிழகத்திற்குப் பொருந்தாது என்று கூறியுள்ள முதலமைச்சர் பழனிசாமி, வேளாண் சட்டங்களால் […]
பள்ளிகள்

You May Like