குயில் இனத்தை சேர்ந்த பறவை ஒன்று 16 நாடுகளை கடந்து இந்திய பெருங்கடல் வழியாக 12,000 கி.மீ. தூரத்தை தாண்டி பயணித்து சாதனை படைத்துள்ளது.

மங்கோலிய விஞ்ஞானிகள் மற்றும் பிரிட்டன் பறவையில் ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து பறவைகளின் நெடுந்தூர பயணங்களை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். குறிப்பாக பறவைகள் செல்லும் தூரத்தை செயற்கைக்கோள் மூலம் கண்காணித்து வந்தனர். இதில் சாம்பியாவில் குளிர்காலங்களில் வாழும் குயில் இனத்தை சேர்ந்த இந்த பறவை தென் ஆப்ரிக்கா வழியாக கொன்யா, சௌதி அரேபியா மற்றும் வங்கதேசம் வழியாக பல்வேறு நாடுகளை கடந்துள்ளது.
அதிலும் குறிப்பாக இந்திய பெருங்கடலை மணிக்கு சுமார் 60 கி.மீ. வேகத்தில் கடந்துள்ளது. பல்வேறு காலநிலைகள், அதிக காற்று போன்றவற்றையும் பொருட்ப்படுத்தாது ஓய்வின்றி தனது பயணத்தை நிறைவு செய்துள்ளது. பறவையின் இந்த பயணம் ஒரு வியக்கத்தக்க பயணம் என விஞ்ஞானிகள் புகழாரம் சூட்டினர்.
செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்பட்ட 5 குயில்களில் ஓனன் என்ற இந்த பறவை மட்டுமே இந்த சாதனை பயணத்தில் வெற்றி பெற்றது என விஞ்ஞானிகள் தெரிவிகின்றனர்.