பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..! மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க தனியாக நிவர் புயல் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..! உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம்..! எச்சரிக்கை 10 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஏற்றம்.. மொத்தமே 11எண்கள் கொண்ட கூண்டு தான்… கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு

ஊரடங்கு உத்தரவையடுத்து மனைவிக்கு உதவி செய்யும் ஷிகர் தவான்… வயிறு குலுங்க சிரிக்க வைத்த காட்சி…

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அறிவித்த நிலையில், கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது வீட்டில் தனது மனைவிக்கு உதவியாக இருக்கும் வீடியோவை வெளியிட்டதால் ரசிகர்கள் அனைவரும் வயிறு குலுங்க சிரித்து வருகின்றனர்.

shikar dhawan

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகமே அச்சம் அடைந்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் பல பேர் பாதிக்கப்பட்டும் உயிரிழ்ந்தும் உள்ளனர். இதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அரசு வெளியிட்டநிலையில் அனைத்து மக்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, மேலும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உட்பட அனைவரும் வீட்டுக்குள்ளே முடங்கிப் போயுள்ளனர்.

shekar dhawan1

இதனால் பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் தங்களது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் ஏதேனும் ஒரு பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர், இந்த வகையில் இந்திய அணியின் அதிரடி நட்சத்திர இடதுகை தொடக்க வீரர் ஷிகர் தவான் தனது வீட்டில் தனது மனைவிக்கு உதவியாக இருக்கும் வீடியோவை வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறை ஒரு வாரத்திற்குப் பிறகு என்ற பெயரில் இன்று வெளியிட்டார்.

ஆனால் இது வெளியிட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே வைரலாக பரவி வருகிறது, ஏனெனில் அந்த வீடியோ பதிவில் முதலில் ஷிகர் தவான் லேசாக அழுது கொண்டே தனது வீட்டு குளியலறையில் துணி துவைப்பது போலவும், அவரின் மனைவி கண்ணாடி முன்பு நின்று தனது முகத்தை அழகு படுத்திக் கொண்டே தவானை மிரட்டுவது போலவும், அதற்கு தவான் பயந்துகொண்டே கையெடுத்து கும்பிட்டு மீண்டும் துணி துவைப்பதை தொடர்கிறார்,

shakar dhawan 2

அடுத்த காட்சியில் அவரின் மனைவி கையில் பிரம்பை வைத்துக் கொண்டு அவரை மீண்டும் மிரட்டுவது போலவும் அவருக்கு பயந்து கொண்டு தவான் தனது வீட்டில் இருக்கும் கழிவறை தொட்டியை அதாவது டாய்லெட்டை இப்படி ஒரு பொண்டாட்டி அமைந்து இருக்கே, எல்லாம் என் விதி என்று தலையில் அடித்துக் கொண்டே சுத்தம் செய்வது போல வீடியோ வெளியிட்டுள்ளார். இவை அனைத்தும் ஜாலியாகவும் பொழுதுபோக்குக்காகவும் வெளியிட்டதால் இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் வயிறு குலுங்க குலுங்க சிரித்து வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

144 தடையை மீறி கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களை தோப்புக்கரணம் போடவைத்த காவல்துறையினர் ...

Thu Mar 26 , 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக 144 தடையை விதித்திருந்த நிலையில், கடலூரில், உத்தரவை மீறி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை காவல்துறையினர் தோப்புக்கரணம் போடவைத்தனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து அச்சத்தில் இருந்து வருகின்றனர். எப்போது என்ன நடக்கும் என்று தெரியாமல் அரசும், பொதுமக்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 144 தடை உத்தரவை […]
144 policemen who play cricket despite the ban ...

You May Like