குடும்பக் கட்டுப்பாடு செய்யச்சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.!

கரூர் மாவட்ட பகுதியில் மருதம்பட்டியில் கூலித் தொழிலாளியான முகேஷ் குமார் மற்றும் அவரது மனைவி ஜோதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள தம்பதியினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலையில் உப்பிடமங்கலம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கியது. அப்போது ஊசி ஒன்று செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஊசி செலுத்தப்பட்ட நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஜோதி அவசர அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் அங்கே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், போலீசார் முறைப்படி விசாரிக்க வேண்டும் என்றும் ஜோதியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Baskar

Next Post

தங்கள் நிலத்திற்காக போராடிய தாய்-மகளை உயிருடன் புதைத்த நில அபகரிப்பு கும்பல்..!! ஆந்திராவில் அதிர்ச்சி..!!

Tue Nov 8 , 2022
ஆந்திராவில் ஒரு ஏழைக் குடும்பத்தின் நிலத்தை அரசியல் செல்வாக்கு படைத்த நபர்கள் அபகரித்ததோடு மட்டுமல்லாமல், தாயையும், மகளையும் குழித்தோண்டி உயிருடன் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஹரிபுரம் கிராமத்தை சேர்ந்த தாய் தாளம்மா, மகள் சாவித்திரி ஆகியோருக்கு சொந்தமான வீட்டுமனையை அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தராவ், பிரகாஷ்ராவ், ராமராவ் ஆகிய 3 பேர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. தங்கள் […]
தங்கள் நிலத்திற்காக போராடிய தாய்-மகளை உயிருடன் புதைத்த நில அபகரிப்பு கும்பல்..!! ஆந்திராவில் அதிர்ச்சி..!!

You May Like