உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தொட்டுள்ளது.
கொரோனாத் தொற்று 2019ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் இந்நகரைச் சேர்ந்த 55வயது முதயவர் ஒருவருக்கு முதன்முதலாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து வேகமாகப் பரவிய நோய் இன்று உலகம் முழுவதும் 209க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக உலகம் முழுவதும் மக்களுக்கு பல்வேறுக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனாவால் சுமார் 2,66,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து இதுவரை 1,29,215 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 7,466 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவே உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,97,388 ஆகவுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 67,99,713 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா
உலக நாடுகளைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பில் அமேரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 19,99,671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,12,579 பேர் உயிரிழந்தும், 5,30,531 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 37,312 ஆகவுள்ளது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,10,887 ஆக அதிகரித்துள்ளது.
மூன்றாவதாக ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,971 ஆகவுள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 476.658 ஆகவுள்ளது.
அடுத்தபடியாக பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 40,597 ஆகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 287,339 ஆகவும் உள்ளது.
இந்த வரிசையில் இந்தியா தற்போது 5ஆவது இடத்தில் உள்ளது.