அழுகிய நிலையில் இரு சடலங்கள் மீட்பு – கொலையா? தற்கொலையா?

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பகளவாடி கிராமத்தைச் சார்ந்த இரண்டு தோழிகள் மலையடிவாரத்தில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அடுத்த பகலவாடி என்ற கிராமத்தைச் சார்ந்த கிருஷ்ணன் என்பவரின் மனைவி சம்பூர்ணம் மற்றும்  அதை ஊரைச் சார்ந்தவர் பெரியக்காள்.  இவர்கள் இருவரது கணவர்களும் இறந்து விடவே  சில காலங்களாக பெரியக்காளும் சம்பூர்ணமும்  நெருங்கிய தோழிகளாக பழகி வந்துள்ளனர். எங்கு சென்றாலும் இவர்கள் இருவரும் ஒன்றாகவே சென்று வருவது வழக்கம்.

இந்த இரண்டு தோழிகளும் கோவிலுக்கு செல்வது வெளியே செல்வது என  எப்போதும் ஒன்றாகவே சுற்றித்திரிந்து இருக்கின்றனர். இது இருவரது வீட்டிற்கும் பிடிக்கவில்லை. இவர்களது குடும்பத்தினர் இது தொடர்பாக  இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் வீட்டில் கோபித்துக் கொண்டு கடந்த ஜனவரி மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். இது தொடர்பாக  புலிவலம்  காவல் நிலையத்தில் புகார் அளித்த குடும்பத்தினர் அவர்கள் இருவரையும் கண்டுபிடிக்க வேண்டினர் இதனைத் தொடர்ந்து காவல்துறை  திருச்சியில் தங்கியிருந்த சம்பூர்ணத்தையும் பெரியக்காளையும் கண்டுபிடித்து அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்தனர்.

இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி  மீண்டும் இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர். இது தொடர்பாக அவரது உறவினர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்து தேடிவந்துள்ளனர். இந்நிலையில்  துறையூர் அருகே பெருமாள் மலை அடிவாரத்தில் இருந்து பெருமாள் மலை கோயிலுக்கு செல்லும் சாலையில் உள்ள  சோதனை சாவடி அருகே 20 அடி உயரத்தில் அழுகிய  நிலையில் இரண்டு பின் சடலம் இருப்பதாக  காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சென்று பார்த்த போது இறந்து கிடந்தது  பெரியக்காள் மற்றும் சம்பூர்ணம் என உறுதி செய்தனர். அவர்கள் இறந்து ஐந்து நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால்  உடலானது அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது. பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் இருவரும்  கொலை செய்யப்பட்டார்களா? இல்லை தற்கொலை செய்து கொண்டார்களா? என்பது குறித்து விசாரித்து வருகிறது காவல்துறை.

Baskar

Next Post

காணாமல் போன மாணவி!எலும்பு கூடாக  கண்டெடுக்கப்பட்ட சம்பவம்!  தர்மபுரி அருகே பரபரப்பு !

Sun Feb 5 , 2023
தர்மபுரி அருகே  ஒன்பது மாதங்களுக்கு முன் கோவில் திருவிழாவின் போது காணாமல் போன  பிளஸ் டூ மாணவி எலும்பு கூடாக  கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தர்மபுரி மாவட்டம்  ஆரூர் அருகே உள்ள  எஸ் அம்மாபாளையம் முள்ளிக்காடு பகுதியைச் சார்ந்தவர்  விவசாயி பெருமாள். இவரது மகள்  கோயம்புத்தூரில்  பிளஸ் டூ படித்து வந்தார். பொது தேர்வுகள் முடிந்ததை அடுத்து கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தனது […]

You May Like