
இராணிப்பேட்டை: மருதாலம் என்ற கிராமத்தில் 70 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த ஆண்புள்ளிமானை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டம் மருதாலம் எனும் கிராமத்தில் சுமார் 70 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று இருந்துள்ளது.அப்பகுதியில் துள்ளிகுதித்து விளையாடிக்கொண்டிருந்த புள்ளி மான் ஒன்று எதிர்பாராதவிதமாக அங்கிருந்த கிணற்றுக்குள் விழுந்துள்ளது. இத்தகவல் அறிந்த இராணிப்பேட்டைதீயணைப்பு படைவீரர்கள் கிணற்றுள் விழுந்த புள்ளிமானை மீட்கும் பணியில் ஈடுபட தொடங்கினா்.

இதற்காக கிணற்றிலிருந்து வெளியில் எடுக்கும் வகையில் கயிறுகளை கட்டி வெளியில் எடுக்க முயன்றுள்ளனர். 70 அடி ஆழம் என்பதால் புள்ளிமானின் கண்களை கட்டி மேலிருந்து கிணற்றுக்குள் இருந்த மானை இழுந்து வெளியில் எடுத்துள்ளனர். பல மணி நேரப்போராட்டத்திற்கு புள்ளிமானை உயிருடன் மீட்ட சந்தோசத்தில் இருந்த தீயணைப்புத்துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். 70 அடி ஆழத்தில் விழுந்தும் உயிருடன் ஆண் புள்ளிமான் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.