லாரன்ஸ் ஏன் தனது பெயருக்கு முன் ‘ராகவா’ என்ற பெயரை சேர்த்துக் கொண்டார் தெரியுமா..? ஜெண்டில் மேன் படத்தில் முதலில் நடிக்க வேண்டிய அர்ஜுன் இல்லை.. இந்த டாப் ஹீரோ தானாம்.. யார் தெரியுமா..? டெல்லி போனப்ப விவசாயிகளை பாத்துட்டு வந்துருக்கலாம்ல..? முதல்வர் பழனிசாமியை கேள்வி கேட்கும் மீம்ஸ்.. சசிகலா மருத்துவமனையில் அனுமதி.. இதுதான் பிரச்சனையாம்.. “வேண்டுமென்றால் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு கொள்ளுங்கள்..” விவசாயிகளிடம் பிடிவாதம் காட்டும் மத்திய அரசு.. சசிகலாவுக்கு என்ன ஆனது..? சிறைக்கு விரைந்த மருத்துவர்கள்.. வெளியான பரபரப்பு தகவல்.. விவசாயிகளின் குடியரசு தின ட்ராக்டர் பேரணி.. விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்.. ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை..! தேர்வு இல்லை..! 8ஆம் வகுப்பு பாஸ் பண்ணிருந்தா போதும்..! இந்த தேதிகளில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வெறும் ரூ. 4,111 இ.எம்.ஐ-ல் இந்த புதிய டாடா காரை வாங்கலாம்.. அதிரடி தள்ளுபடி சலுகை.. பெர்சனல் லோன் வாங்கும் முன் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.. பயனுள்ள பதிவு.. இது தெரிஞ்சா கொத்தமல்லியை இனி வீணாக்க மாட்டீங்க..! அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் தான்..! ஆஹா.. என்ன ஒரு போட்டி..! 60 நிமிடத்தில் 4 கிலோ சாப்பிடனுமாம்..! பரிசு என்ன தெரியுமா..? திருமணம் ஆன பெண் வேறு ஆணோடு இருந்தால் நீதிமன்றம் பாதுகாப்பு கொடுக்காது – உயர் நீதிமன்றம் 5 ஆண்டுகள்.. 44 பேரால் பாலியல் வன்கொடுமை..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

பாதுகாப்பை அதிகரியுங்கள்..முப்படைகளையும் தயார் நிலையில் வைக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் உத்தரவு

முப்படைகளும் தயார் நிலையில் இருக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

Rajnath Singh 1

கடந்த மே மாதம் கிழக்கு லடாக் பிராந்தியத்தில் இந்தியா – சீனா நாட்டு ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சுமார் 6 வாரங்களாக லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீனா ராணுவத்தினர் இடையே மீண்டும் பயங்கர கைகலப்பு ஏற்பட்டது.

இதில் இரு நாட்டு வீரர்களும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர மோதலில் இரு தரப்பிலும் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில், தமிழக வீரர் உட்பட 20 இந்திய ராணுவத்தினர் பலியாயினர். மேலும் 4 இந்திய வீரர்கள் கவலைகிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் சீன படையில் பலி மற்றும் படுகாயம் அடைந்தோர் சேர்த்து 43 பேர் என கூறப்படுகிறது. 45 ஆண்டுக்குப் பிறகு இந்தியா – சீனா ராணுவம் இடையேயான மோதலில் உயிர் பலி ஏற்பட்டுள்ளதால் போர் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

download 52

இதற்கிடையே, லடாக் எல்லை ஏற்பட்ட மோதல் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் தளபதிகள் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியை சந்தித்து விளக்கினார். பின்னர் மீண்டும் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

images 52 1

இந்நிலையில், லடாக் பகுதியில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் வெளியுறவுத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஆலோசனை கூட்டத்தின்போது, முப்படைகளும் தயார் நிலையில் இருக்க ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகளுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். மேலும், எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்கவும், பாதுகாப்பு தேவையான இடத்தில் கூடுதல் படைகளை அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.

1newsnationuser4

Next Post

“மிகுந்த மன உளைச்சல்.. வேதனை..” இந்திய ராணுவ வீரர்களின் வீரமரணம் குறித்து ராஜ்நாத் சிங் கருத்து..

Wed Jun 17 , 2020
இந்திய ராணுவ வீரர்களின் வீரமரணம் குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வேதனை தெரிவித்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில், நேற்று முன் தினம் இரவு இந்திய இராணுவத்திற்கும் சீன வீரர்களுக்கும் இடையில் மிக மோசமான மோதல் நடைபெற்றது. இரு நாட்டு எல்லையான லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட இந்த மோதலில் இந்தியாவின் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் 40 க்கும் […]
இந்தி

You May Like