சர்க்கரை நோயா..? இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்..! கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு! டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது! ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா..! ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது? பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை! அதிமுக ஆட்சி, முதல்வரை பற்றி யாராவது தவறாக பேசினால் தண்ணி குடத்தால் குத்து விடுங்கள்: சர்ச்சை மன்னன் திண்டுக்கல் சீனிவாசன் தன்னை எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்பதை 15 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார் எஸ்.பி.பி.! பள்ளிகள் திறப்பு… இத்தன குழப்பம் பண்றீங்களே? உங்களுக்கே நியாயமா இருக்கா சார்? திமுக முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம்! தனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்… 4 மாதங்களுக்கு முன்பே உணர்ந்த எஸ்.பி.பி! பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த தந்தை, மகன் கைது..! கல்வி அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை..! தர்ணா போராட்டம் நடத்திய பெண்..! "அந்த மனசு தான் சார் கடவுள்"..! சோகத்திலும் ரசிகர்களை நெகிழ வைத்த விஜய்..! வைரல் வீடியோ.. கணவரும், அவரது அண்ணனும் சேர்ந்து பாலியல் தொல்லை..! கொரோனா என நாடகமாடி ஆம்புலன்ஸில் தப்பி ஓடிய பெண்..! ஜிம் உரிமையாளருடன் தலைமறைவான மனைவி..! மீட்டு தரக் கூறி கணவர் புகார்..!

சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா..? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அதிர்ச்சி..

காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சர்

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ நேற்று இரவு ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் மூச்சுத்திண்றல் காரணமாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டேன். எனது உடல்நிலை குறித்த தகவல்களை தொடர்ந்து தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சத்யேந்தர் ஜெயின் விரைவில் குணமாக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் பதிவில் “ உங்கள் உடல்நலத்தை கருத்தில் கொள்ளாமல் 24*7 பொதுமக்களின் நலனுக்காக சேவை செய்தீர்கள். உங்கள் உடல்நிலையை பார்த்துக் கொள்ளுங்கள்.. விரைவில் குணமடைய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று முன் தினம் மத்திய உள்துறை அமைச்சர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் டெல்லி முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். அந்தக் கூட்டத்தில் சத்யேந்தர் ஜெயின் மற்றும் பல மூத்த அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

டெல்லியில் மட்டும் 42,000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்புஉறுதியாகி உள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில், மகாராஷ்டிரா, தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக டெல்லி 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கிராமங்களுக்குள் நுழைந்த கொரோனா வைரஸ்; மக்களை காக்க என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

Tue Jun 16 , 2020
சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்து சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு பரிசோதனை செய்யப்படாததன் அலட்சியத்தால் கிராமங்களில் கொரொனாவின் பாதிப்பு தொடக்கம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடங்கிய காலக்கட்டத்திலிருந்து அமைதியான இயற்கை சூழலோடு, தனக்கான பணியினை செம்மையாக செய்து வந்தவர்கள் தான் கிராமத்து மக்கள். ஊரடங்கு காலத்தில் கூட காட்டு வேலைகளுக்கு செல்வது, வேலை இல்லாத நேரத்தில் அக்கம் பக்கத்து வீட்டில் அமர்ந்து அல்லது உறவினர்களுடன் இணைந்து தாயம் விளையாடி வந்தவர்களையும் கொரோனா வைரஸ் […]
கிராமங்களுக்குள் நுழைந்த கொரோனா வைரஸ்; மக்களை காக்க என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

You May Like