டெல்லியில் பயங்கரம்: 7 வயது சிறுமிக்கு உடலெங்கும் 18 தழும்புகள்! நாக்கை கீறி கொடுமை படுத்திய வளர்ப்புத் தாய்!

இந்திய தலைநகர் டெல்லியில் தத்தெடுத்த சிறுமியை கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பாக செவிலியர்  கைது செய்யப்பட்டுள்ளது அங்கு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியின் சப்தார்ஜங்க் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருபவர் ரேணுகுமாரி. 50 வயதான இவர் தனது உறவினர் ஒருவரின் ஏழு வயது மகளை தத்தெடுத்துள்ளார். அந்தக் குழந்தை அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறது. இந்நிலையில் குழந்தைகளின் உடலில் காணப்பட்ட காயங்களை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது ஆசிரியை இது தொடர்பாக காவல்துறையில் புகார் செய்தார். இதனை அடுத்து விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் அந்த சிறுமியின் வளர்ப்புத் தாய் ரேணுகுமாரி அவரது கணவர் ஆனந்த் குமார் மற்றும் மகன் ஜானி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி  அச்சம் கொள்ள வைத்திருக்கிறது. தனது உறவினர் மகளை வளர்ப்பதற்காக தத்தெடுத்த ரேணுகுமாரி அந்தக் குழந்தை தத்தெடுக்கப்பட்ட முதல் நாளிலிருந்து சிறுமியை சித்திரவதை செய்து வந்திருக்கிறார்.

மேலும் கடந்த டிசம்பர் ஜனவரி மாதங்களில் டெல்லியின் கடும் குளிரிலும்  பால்கனியில் மட்டுமே படுக்குமாறு அந்த குழந்தையை கட்டாயப்படுத்தி  துன்புறுத்தி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் குழந்தையின் நாக்கை கத்தியால் கீரியும் குழந்தையின் உடலில் பல இடங்களில் சூடு வைக்கும் அடிக்கடி அடிப்பதும் என  ஏராளமான கொடுமைகளை அந்த சிறுமிக்கு இழைத்திருக்கிறார் அவரது வளர்ப்புத்தாய். இந்தக் கொடுமைகளால் ஏற்பட்ட  காயங்களின் தழும்புகள் அந்த சிறுமியின் உடல் முழுவதும் இருந்திருக்கிறது. இதனை கவனித்த அவரது பள்ளி ஆசிரியை  இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்ததன் மூலம் சிறுமி கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் இன்று வெளி உலகத்திற்கு தெரிந்திருக்கிறது. தற்போது சிறுமிக்கு  மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன அவரின் உடலில் 18 தழும்புகள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தீவிரமான விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Baskar

Next Post

காது வலிக்கு மருத்துவமனைக்கு சென்ற +1 மாணவி! பரிதாபமாக மரணம் உறவினர்கள் முற்றுகை போராட்டம்!

Sat Feb 18 , 2023
தீராத காது வலி பிரச்சனைக்கு மருத்துவமனைக்கு சென்ற பதினொன்றாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம், சென்னையில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை திருவொற்றியூரைச் சார்ந்தவர் நந்தினி  இவருக்கு 16 வயதில் அபிநயா என்ற மகள் இருந்தார். அபிநயா ராயபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். சிறு வயது முதலே அவருக்கு காது வலி இருந்து வந்துள்ளது. ஆனால் சில மாதங்களாக காது வலி […]

You May Like