மாநிலம் முழுவதும் ஆரம்ப பள்ளிகளுக்கு விடுமுறை…! இன்று அரசு முக்கிய ஆலோசனை…!

டெல்லியில் காற்றின் தரம் சற்று மேம்பட்டுள்ளதால் பள்ளிகள் திறப்பது தொடர்பாக இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

தலைநகரில் ஜிஆர்ஏபி ஸ்டேஜ் 4 நடவடிக்கைகளை மத்திய அரசு நீக்கியதால் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் காற்றின் தரம் சற்று மேம்பட்டது. டெல்லியில் காற்றின் தரம் ‘கடுமையானது’ என்பதில் இருந்து ‘மிகவும் மோசமான’ வகைக்கு மேம்பட்டதால், ஆரம்பப் பள்ளிகளை மூடுவது உட்பட நகரத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படலாம்.

இது தொடர்பாக மாநிலத்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் இன்று உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசின் காற்றின் தரக் குழுவின் புதிய வழிகாட்டுதல்களைப் பற்றி விவாதிக்கப்படும் என்றும் மேலும் மாநிலத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளது..

Vignesh

Next Post

#TnGovt: அரசு பணி பதவி உயர்வில் இவர்களுக்கு எல்லாம் 4% இட ஒதுக்கீடு...! குழு அமைத்து தமிழக அரசு அதிரடி...!

Mon Nov 7 , 2022
அரசு பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்க துணைக்குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு பணியிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில்‌ 4% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசால்‌ வழிகாட்டு நெறிமுறைகள்‌’ வெளியிடப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்றம்‌ மற்றும்‌ மதுரை உயர்நீதிமன்ற கிளையில்‌ அரசுப்‌ பணி பதவி உயர்வுகளில்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கக்‌ கோரி வழக்குகள்‌ தொடரப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட அலுவலர்களைக்‌ […]

You May Like