இந்தியா ஆஸ்திரேலியா 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி…! முதல் நாள் உணவு இடைவேளை ஆஸ்திரேலியா அணி 94-3…!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கின்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 4️ போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இந்திய அணி முதல் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற்றது. அதோடு தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.

இந்த சூழ்நிலையில்தான் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று ஆரம்பமாகி நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் தேர்வு செய்வதாக அறிவித்தது அதனை அடிப்படையாகக் கொண்டு இந்திய அணி முதலில் பந்து வீசி வருகின்றது.

ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்கார டேவிட் வார்னரும், கவாஜாவும் களமிறங்கினர். இருவரும் ஆரம்பத்தில் நிதானத்தை கடைபிடித்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.கவாஜா அரை சதம் அடித்தார். நிதானமாக விளையாடிய ஆஸ்திரேலியா அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழக்கூடிய ஸ்டீவ் ஸ்மித்தும் லபுஷேனும் அஸ்வினின் சுழற் பந்தில் தங்களுடைய விக்கட்டை பறி கொடுத்தார்கள்.

லபுஷேன் 15 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த நிலையில், ஸ்மித் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். முதல் நாள் உணவு இடைவேளை வரையில் ஆஸ்திரேலிய அணி 25 ஓவர்களில் 3️ விக்கட்டுகளை இழந்து 94 ரன்களை சேர்த்து இருக்கிறது. இந்திய அணியின் தரப்பில் சமி 1 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் எடுத்து இருக்கிறார்கள்.

Next Post

குழந்தை பெற்ற கையோடு 10 ம் வகுப்பு தேர்வு எழுதிய 22 வயது இளம் பெண்….!

Fri Feb 17 , 2023
பீகார் மாநிலம் வாங்கா மாவட்டத்தை சார்ந்தவர் ருக்மிணி குமாரி (22) இவர் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், கடந்த செவ்வாய்க்கிழமை கணித தேர்வை எழுத காத்திருந்தார். மறுநாள் அறிவியல் தேர்வு எழுத வேண்டியதாக இருந்தது. இந்த சூழ்நிலையில் தான் இரவில் வீட்டில் இருந்த அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. ஆனாலும் மறுநாள் தேர்வு எழுத வேண்டும் என்பதில் அவர் உறுதியுடன் இருந்தார். இது […]

You May Like