பயங்கரவாதத்திற்கு தொடர்பு…! இரண்டு அமைப்புகளை மத்திய அரசு தடை செய்துள்ளது…!

பயங்கரவாதத்திற்கு தொடர்புடையதாக கூறி இரண்டு அமைப்புகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.

பஞ்சாபில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்கும் நோக்கம் கொண்ட பயங்கரவாத அமைப்பான காலிஸ்தான் புலிப்படை பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ், பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு இன்று அறிவித்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிகாட்டுதல்படி, உள்துறை அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

பிராந்திய ஒருமைப்பாடு, ஒற்றுமை, தேசப்பாதுகாப்பு, இந்திய இறையாண்மை ஆகியவற்றுக்கு சவால் விடுப்பதாகவும், பஞ்சாபில் கொலை சம்பவங்களுக்கு இலக்குவைத்தல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதச் செயல்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் இந்த அமைப்பிற்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல், ஜம்மு-காஷ்மீர் கஸ்னாவி ஃபோர்ஸ் (ஜேகேஜிஎஃப்) அமைப்பும் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஊடூருவல் முயற்சிகளிலும், போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தலிலும் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதுடன், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது. லஷ்கர்-ஈ-தொய்பா, ஜெய்ஷ்-ஈ-முகமது, தெஹ்ரிக் உல் முஜாஹிதின், ஹர்கத்-உல்-ஜிகாத்-இ இஸ்லாமி உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளிலிருந்த தீவிரவாதிகளை இது பயன்படுத்தியுள்ளது.

Vignesh

Next Post

கணவன், மனைவியிடம் சிக்கித் தவித்த ஐஐடி மாணவன்..!! கை, கால்களை கட்டிப்போட்டு பலாத்காரம்..!! கொடூர சம்பவம்..!!

Sun Feb 19 , 2023
மும்பையில் உள்ள ஐஐடி பாம்பே கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவருக்கு, தன்பால் ஈர்ப்பாளர்களுக்கான டேட்டிங் செயலி ஒன்றின் மூலமாக 40 வயதான ஆண் ஒருவரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில், ஐஐடி மாணவர், 40 வயதான அந்த ஆண் மீது மும்பை போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், அந்நபர் தன்னுடன் இயற்கைக்கு மாறான வகையில் செக்ஸ் டார்ச்சர் […]

You May Like