”ஆண்ட்டி மீது அதீத ஆசை”..!! கட்டையால் தாக்கி கட்டிலில் படுக்க வைத்து காமத்தை கக்கிய வாலிபர்..!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த மூவாற்று முகம் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான டிப்ளமோ என்ஜினியர் எட்வின். அரபு நாடுகளில் தங்கி சிங்கிளாக பணிபுரிந்த எட்வினுக்கு பெண்கள் மீது அதீத ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பியதும் தனியாக வீட்டில் படுத்து உறங்கும் பெண்களை பார்த்து ரசிக்கும் சைக்கோவாக மாறிய எட்வினின் கவனம், இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த 47 வயது பெண் மீது விழுந்துள்ளது. அந்தப்பெண் தனது இரு மகள்களுக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு தனது கணவருடன் வசித்து வருகிறார்.

அண்மையில் அந்தப்பெண் வீட்டில் தூங்குவதை ஜன்னல் வழியாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்த எட்வின், அந்தப்பெண்ணிடம் கையும் களவுமாக சிக்கினான். ஜன்னலில் பல்லி போல ஒட்டியிருந்த எட்வினை பார்த்து சத்தமிட்டதோடு, எட்வினின் தாய் ரோஸ்லியிடம் அவனது சைக்கோ சேட்டை குறித்து புகார் அளித்துள்ளார். ஊரில் உள்ள மற்றவர்களிடமும் எட்வினின் வினோத கைவரிசை குறித்து தெரிவித்ததால் எட்வின் வெளியில் தலை காட்ட முடியாத அளவிற்கு அவமானப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அந்தப்பெண் வீட்டில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதை கவனித்த எட்வின், யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் புகுந்து, அந்த பெண்ணை இரும்பு கம்பியால் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளான்.

அந்தப்பெண் சத்தமிட்டதால் தலைமுடியை பிடித்து கட்டில் சட்டத்தில் வைத்து மோதி சுய நினைவை இழக்க செய்துள்ளான். இதையடுத்து, மயக்கமடைந்த பெண் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், எட்வின் அந்தப்பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி உள்ளான். எட்வின் வீட்டில் இருந்து வெளியில் ஓடுவதை கண்ட அந்தப்பெண்ணின் கணவர் பதறிபோய் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பலத்த காயத்துடன் கிடந்த தனது மனைவியை மீட்டு திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இதுகுறித்து போலீசாரிடமும் புகார் அளித்தார். அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், எட்வினை கையும் களவுமான கைது செய்தனர்.

பெண்களை ரசித்து பார்க்கும் பழக்கத்தை வீட்டில் போட்டு கொடுத்த ஆத்திரத்தில் அந்தப்பெண்ணை தாக்கியதாகவும், அவர் மீது ஏற்பட்ட அதீத ஆசையால் அத்துமீறியதாகவும் எட்வின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, எட்வினை பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் அவனை சிறையில் அடைத்தனர்.

Chella

Next Post

சென்னை பேருந்து போக்குவரத்தில் அதிரடி மாற்றம்…..! போக்குவரத்து துறை வெளியிட்ட சுற்றறிக்கை…..!

Fri Feb 17 , 2023
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தலைநகரம் சென்னைக்கு புறப்படும் பேருந்துகள் அனைத்தும் தாம்பரம் வழியாக சென்னைக்குள் நுழைந்தால் அதிக நேரம் மிச்சம் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. தற்சமயம் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் கோயம்பேடுக்கு வந்து தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளின் வழியாகவும் அல்லது பெருங்களத்தூர் மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளின் வழியாகவும் செல்கின்றன. தாம்பரம் வழியாக சென்னைக்குள் பேருந்துகள் வந்தால் நேர குறைவு ஏற்படும் ஆனால் போக்குவரத்து நெரிசலை […]

You May Like