பொருட்களை டிரோன் மூலம் டெலிவரி செய்ய சோமேட்டோ, ஸ்விகி மற்றிம் டன்சோ போன்ற முக்கியமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
அமேரிக்காவில் ஏற்கனவே டிரோன் மூலம் டெலிவரிகளை அமேசான் போன்ற நிறுவனங்கள் செய்துவருகின்றன. இதேபோன்று இந்தியாவிலும் அளில்லா விமானங்கள் மூலம் டெலிவரி செய்ய மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகத்திடம் அனுமதி கேட்கப்பட்டது.

இதையடுத்து நாட்டில் இயங்கி வரும் ஸ்விகி, சோமேட்டோ, டன்சோ போன்ற பத்து நிறுவனங்களுக்கு முதலில் டிரோன்களை சோதனை செய்வதற்கான அனுமதியை மத்திய இயக்குனரகம் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம், நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை மேலும் அதிகப்படுத்தமுடியும். அதேபோல், வான்வளி ஆய்வுத் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிரோன் டெலிவரிக்கு சோதனை செய்யும் அனுமதியுடன், சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களின் கான்செப்ட் விவரங்களை செப்டம்பர் மாதத்திற்குள் சமர்பிக்க மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.