தமிழகத்தை அதிர வைத்த ஏடிஎம் கொள்ளை….! வங்கி அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை….

தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுப்பதற்கு தமிழகஅரசும், காவல்துறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை ஆனாலும் தமிழக அரசும், காவல்துறையும் இதற்கான முயற்சியையும் கைவிடுவதாக இல்லை.

சென்ற 2 நாட்களுக்கு முன்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கின்ற நான்கு ஏடிஎம்களில் இருந்து 75 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே ஏடிஎம் கொள்ளையர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் வேலூர், திருவண்ணாமலை, ஆந்திர மாநில எல்லையோர பகுதிகளிலும் முகாமிட்டு தீவிரமான சோதனையில் இறங்கி இருக்கிறார்கள்.

இந்த ஏடிஎம் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் இருக்கிற மாவட்ட எல்லைகளில் இருக்கின்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழ்நிலை எல்லாம் இந்த கொள்ளை சம்பவத்தில் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கிய நபர்களே ஈடுபட்டு இருப்பதாகவும், தகவல் கிடைத்தது. கியாஸ் கட்டர் உள்ளிட்டவற்றை கொண்டு ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

தங்களுடைய அடையாளம் மற்றவர்களுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதை மனதில் வைத்து, கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்திற்கு தீ வைத்திருக்கிறார்கள். இதில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் சேதம் அடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு 51 வங்கி பொது மேலாளர்கள் மற்றும் பொறுப்பு பாதுகாப்பு அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தி இருக்கிறார். அந்த ஆலோசனையின் போது வாங்கி மற்றும் ஏடிஎம் இயந்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும் பணத்தை கண்காணிப்பதற்காக மறைமுக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.

மேலும் அப்படி சம்பவங்கள் ஏதாவது நடைபெற்றால் முகத்தை அடையாளம் காண உதவிகரமாக இருக்கும் மென்பொருள் இருக்கின்ற கண்காணிப்பு கேமராக்களை ஏடிஎம்களிலும் பொருத்த வேண்டும். ஏடிஎம்கள் உடைக்கப்படும் சமயத்தில் எச்சரிக்கை மணி அடிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் ஏடிஎம் மையத்திற்கு அருகில் இருக்கின்ற காவல் நிலையத்திலும் இதற்கான எச்சரிக்கை மணி அடிக்கும் வகையில் அமைப்பு இருக்க வேண்டும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு வலியுறுத்தி இருக்கிறார்

Next Post

அசத்தல்.. தினமும் 2.5 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் கால்ஸ்... ஜியோவின் காதலர் தின சிறப்பு ஆஃபர்...

Tue Feb 14 , 2023
இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை போட்டிப் போட்டுக்க்கொண்டு அறிவித்து வருகின்றன.. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் காதலர் தினத்தை முன்னிட்டு கூடுதல் சலுகைகளை அறிவித்துள்ளது.. பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு திட்டங்கள் எப்போது வரை இருக்கும் என்றும் அந்நிறுவனம் அறிவிக்கவில்லை. ரூ.349. ரூ.899. ரூ.2,999 ஆகிய திட்டங்களை ஜியோ அறிமுகம் செய்துள்ளது.. ரூ.349 திட்டம் : காதலர் தினத்தை […]

You May Like