‘பிரேக்’ உடைந்ததால் வாணியம்பாடியில் நின்ற தன்பாத் ரயில்!

சென்னை வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்திற்க்கு செல்ல இருந்த ரயில் பழுதாகி தண்டவாளத்தில் நின்றதால் ரயில்வே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அந்தப் பாதையில் செல்ல வேண்டிய ஏராளமான ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.கேரள மாநிலம் ஆலப்புழாவிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்திற்கு செல்ல வேண்டிய தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை 4 மணி அளவில் வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது இந்த ரயிலின் ஆறாவது பெட்டியில் இருக்கும் பிரேக் இணைப்பு பாதிக்கப்பட்டதால் அந்த பிளாட்பாரத்திலேயே நின்றது. இதன் காரணமாக அந்த வழியாக செல்ல வேண்டிய அனைத்து ரயில்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனைத் தொடர்ந்து அந்த ரயிலின் ஓட்டுனர் ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடியில் உள்ள ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் சீரமைப்பு குழுவினருடன் வாணியம்பாடி விரைந்து வந்து பழுதான பிரேக்கை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அதிகாரிகளின் தீவிர முயற்சியில் இரவு 8 மணி அளவில் பழுதான பிரேக் சரி செய்யப்பட்டு தன்பாத் எக்ஸ்பிரஸ் புறப்பட தயாரானது. இதனைத் தொடர்ந்து அந்த ரயில் வாணியம்பாடியில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்றது. ரயிலில் ஏற்பட்ட பழுது காரணமாக குமார் 4 மணி நேரத்திற்கு மேலாக தாமதத்திற்கு பின் ரயில் புறப்பட்டு சென்றது அதன் பயணிகளை கடும் அசவுகரியத்திற்கு உள்ளாக்கியது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் அந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

Baskar

Next Post

அழுகிய பிணங்களுடன் 7 நாட்கள் வாழ்ந்த தாய் மகன் ஈரோட்டில் அதிர்ச்சி !

Mon Feb 13 , 2023
அழுகிய நிலையில் கடந்த சடலங்களுடன் தாயும் மகனும் ஏழு நாட்கள் வாழ்ந்த சம்பவம் ஈரோடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம் குமணன் வீதியைச் சார்ந்தவர்கள் மோகனசுந்தரம் மற்றும் சாந்தி தம்பதி. இந்த தம்பதிக்கு சரவணக்குமார் (33) என்ற மகனும் சசிரேகா (35) உள்ளனர். இதில் சசி ரேகாவுக்கு திருமணமாகி திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் பகுதியில் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவரது மகன் சரவணகுமார் உடல்நலம் சரியில்லாதவர். […]

You May Like