சென்னை கிரிக்கெட் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடிய டோனியின் மனைவி ஷாக் ஷி, டோனியின் ஊரடங்கு பொழுதுபோக்கு குறித்து சுவாரஸ்யமான பதில்களை பதிவிட்டுள்ளார்.

ஊரடங்கு சமயத்தில் பல பிரபலங்களும் தங்கள் வாழ்கை முறை குறித்த செய்திகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை தொடர்ந்து உற்சாகத்துடன் வைத்துள்ளனர். இந்த வகையில் சென்னை கிரிக்கெட் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகேந்திர சிங் டோனியின் மனைவி ஷாக் ஷி டோனியின் ஊரடங்கு பொழுதுபோக்கு குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

“டோனியின் மூளை ஓய்வின்றி சுறுசுறுப்பாக இயங்க கூடியது. தற்போது அதிகமாக வீடியோ கேம் விளையாடுகிறார். தூக்கத்தில் கூட அவருக்கு பப்ஜி தான். இது அவரது மனதை எளிதாக திசை திருப்பி விடுகிறது. பின்பு பைக் பாகங்களை தனியாய் வாங்கி பொருத்துவது அவரது இன்னொரு பழக்கம். முதல் நாள் மாட்டிய பைக் பாகத்தில் ஏதேனும் விடுபட்டிருந்தால் மறுநாள் மீண்டும் கழட்டி மாட்டும் பொறுமையுடையவர். அவருடைய பொறுமையை என்னால் மட்டுமே இழக்க செய்ய முடியும். என்னால் மட்டுமே அவருடைய கோவத்தை தூண்ட முடியும். ஏனெனில் நானே அவருக்கு நெருக்கமானவள்.” என்று தாங்கள் காதலையும் டோனியின் ஊரடங்கு வாழ்க்கையையும் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். இது டோனி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்துடன் பேசப்பட்டு வருகிறது.