பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. என்னென்ன தெரியுமா..? ஆபாச படங்களை அனுப்பி வளர்த்த ஃபேஸ்புக் காதல்; நம்பி சென்றதால் நடந்த விபரீதம்…. பைக்கில் ஏற மறுத்த பெண்; எரிந்த நிலையில் சடலமாக மீட்பு… “பேண்ட் ஜிப்பை கழற்றுவது பாலியல் குற்றம் இல்லை..” மார்பை தொடுவது குறித்து சர்ச்சை தீர்ப்பளித்த அதே நீதிபதி தான்.. ஏழை மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்; 'மி இந்தியா' உடன் கைகோர்கிறார் சோனுசூட்… ரூ. 50,000 தள்ளுபடி விலையில் கார் வாங்கலாம்.. அசத்தல் ஆஃபர்.. எந்தெந்த நிறுவனங்களில்..? மக்களே உஷார்..! புதிய கொரோனா வைரஸ் 70 நாடுகளுக்கு பரவியுள்ளது..! WHO விடுக்கும் எச்சரிக்கை..! 'பூவே உனக்காக' படத்தில் நடித்த ஹீரோயினா இது..! அட.. ஆளே அடையாளம் தெரியாத மாதிரி மாறிட்டாங்களே..! தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் தகவல்.. ஜெயலலிதா பிறந்தநாள் இனி அரசு விழா.. முதல்வர் அறிவிப்பு.. 'மாமியார் வீட்டுல இராணுவ வீரர்னு சொல்லிட்டேன்.. அதான்..' சீருடை அணிய தெரியாமல் சிக்கிய போலி இராணுவ வீரர்..! ஜெயலலிதா சிலை திறப்புக்கு உதவிய நடிகர் அஜித்.. எப்படி தெரியுமா..? பளிச்சென்று பறந்து கொண்டிருந்த UFO..! "இப்படி ஒன்றை பார்க்கவே முடியாது" ஷாக் ஆன விமானி..! யூடியூப், பேஸ்புக் வீடியோக்களுக்கு வருகிறது கட்டுப்பாடு..! பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..! பயணி போல் நடித்து கார் டிரைவர் கொலை..! 15 ஆண்டுகளாக நீதிமன்றத்தை ஏமாற்றிய கொலையாளி..!

கொரோனாவினை தடுக்க ஆக்கப்பூர்வமான கருத்தினை ஸ்டாலின் கூறியுள்ளாரா? – முதல்வர் பழனிச்சாமி கேள்வி

kovai edapti

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை சரியில்லை என தெரிவித்து வரும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், ஆக்கப்பூர்வமான கருத்தினை கூறவில்லை எனவும் இதுவரை என்ன ஆலோசனையை அரசிற்கு வழங்கியுள்ளார் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.


கோவையில் கொரொனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், அரசு சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக தான் கோவையில் கொரோனா தொற்று பரவாமல் கட்டுக்குள் வந்துள்ளது என தெரிவித்தார். மேலும் இதுவரை கோவை மாவட்டத்தில் 36 ஆயிரத்து 905 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், இதுவரை 292 பேருக்கு தொற்று உறுதியாகியிருப்பதாக கூறினார்.

கொரோனாவினை தடுக்க ஆக்கப்பூர்வமான கருத்தினை ஸ்டாலின் கூறியுள்ளாரா? -  முதல்வர் பழனிச்சாமி கேள்வி

மேலும், தமிழகத்தில் கொரோனா தடுப்பு குறித்து மாவட்ட வாரியாக ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்த முதல்வர், இதுவரை 16 முறை அதிகாரிகளுடனும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் 7 முறை ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் முதல்வர் கூறினார். இதோடு கோவையில் 10 பரிசோதனை மையங்களையும் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் சோதனை மையங்களில் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் கொரோனா தமிழகத்தில் சமூக பரவலாக மாறவில்லை எனவும் கூறியுள்ளார்.

கொரோனாவினை தடுக்க ஆக்கப்பூர்வமான கருத்தினை ஸ்டாலின் கூறியுள்ளாரா? -  முதல்வர் பழனிச்சாமி கேள்வி

இதுப்போன்று கொரோனாவினை தடுக்க பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு எடுத்துவரும் நிலையில், தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கை சரியாக இல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவது பொய்யான குற்றச்சாட்டு என்று கூறினார். இதோடு கொரோனாவினை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான கருத்தை கூறாத ஸ்டாலின், இதுவரை என்ன ஆலோசனையினை தமிழகத்தில் வழங்கியுள்ளார் என முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நோயினை வைத்து அரசியல் செய்யும் ஒரே தலைவர் எதிரக்கட்சி தலைவர் ஸ்டாலினாக தான் இருக்க முடியும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.

1newsnationuser2

Next Post

கொரோனா எதிரொலி; மன அழுத்தத்தில் இருந்த 5 லட்சம் பேருக்கு கவுன்சிலிங் வழங்கிய மாநில சுகாதாரத்துறை!..

Thu Jun 25 , 2020
கேரள மாநிலத்தில், கொரோனாவால் ஏற்பட்ட மனஅழுத்தத்தை போக்க சுமார் 5 லட்சம் பேருக்கு கவுன்சிலிங் தரப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு முதலில் தாக்கியது கேரள மாநிலத்தில் தான். இதனையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் ஊரடங்கு, பிரேக் த செயின் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதோடு சுகாதாரத்துறை அதிகாரிகளும், அவர்களது பணியினை செம்மையாக மேற்கொண்டனர். அதற்குப்பலனாக தான் தற்போது மற்ற மாநிலங்களில் […]
கொரோனா மன அழுத்தத்தில் இருந்த 5 லட்சம் பேருக்கு கவுன்சிலிங் வழங்கிய மாநில சுகாதாரத்துறை!..

You May Like