அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

இத்தாலி சாலைகளில் மக்கள் இறந்து கிடந்தனரா..? பிரதமர் மோடி தனிமைப்படுத்தப்பட்டாரா..? கொரோனா குறித்த போலி செய்திகளும்.. உண்மையும்..

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்தியா உட்பட பல நாடுகள் ஊரடங்கு உத்தரவுகளை அமல்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள மக்களிடையேயும் மிகப்பெரிய பீதியை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கொரோனா குறித்து பரப்பப்படும் போலி செய்திகள் மற்றும் பார்வேர்டு மெசேஜ்கள் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல மக்களிடையே உள்ள பயத்தை மேலும் அதிகரித்துள்ளன. கொரோனா குறித்து பரவிய வதந்திகளையும், தவறான புகைப்படங்கள் குறித்தும், அவற்றின் உண்மை தன்மை குறித்தும் தற்போது பார்க்கலாம்..

fakenews

லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கடந்த மாதம் 16-ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர் கலந்து கொண்ட பார்ட்டிகளில் பாஜக தலைவர்கள் பலர் கலந்துகொண்டதால் பலருக்கு நோய் தொற்று பரவியிருக்கலாம் அஞ்சப்படுகிறது. இதனிடையே பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இந்த சூழலில் தான் கனிகா கபூரும், இளவரசர் சார்லஸும் சந்தித்து கொண்டதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஆனால் உண்மை என்னவெனில், இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது 2015-ம் ஆண்டு. அப்போது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படம் தற்போது இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில் இந்தப் புகைப்படம் பரவி வருகிறது.

kanika kapoor charles

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று. இத்தாலியில் அதிகபட்சமாக 7,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இத்தாலி தெருக்களில் மக்கள் இறந்து கிடப்பதாக ஒரு புகைப்படம் பரவி வருகிறது. ஆனால் இந்த புகைப்படம் இத்தாலியில் எடுக்கப்பட்ட புகைப்படமே அல்ல. அது கடந்த 2014-ம் ஆண்டு ஜெர்மனியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்துள்ளது. நாஜிக்களின் வதை முகாம்களில் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் விதமாக, மக்கள் சாலைகளில் படுத்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்..

italy death fake

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. அந்த வகையில் ரஷ்ய அரசு தங்கள் நாட்டு மக்கள் வீட்டை விட்டு வெளியேற கூடாது என்பதற்காக, 500 சிங்ககளை சாலைகளில் உலவ விட்டுள்ளது என்று ஒரு புகைப்படம் வெளியானது.

ஆனால் அது தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க் நகரத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம். அந்த புகைப்படத்தில் போலியாக பிரேக்கிங் நியூஸ் என்று பதிவிட்டு போலி செய்தியை பரப்பியுள்ளனர். ரஷ்ய அரசு சிங்கங்களை அவிழ்த்துவிட வில்லை என்பது தான் உண்மை..

russia lions

அடுத்த புகைப்படமும் இத்தாலி நாட்டுடன் சம்மந்தப்பட்டது தான். இத்தாலியில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், கொரோனாவின் தாக்கத்தில் இருந்து தங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் கண்ணீர் விட்டு அழுததாக ஒரு புகைப்படம் பரவியது. ஆனால், அந்த புகைப்படத்தில் இருந்தது இத்தாலி பிரதமரே இல்லை..

அவர் பிரேசில் பிரதமர் ஜெய்ர் பொல்சாரோ ஆவார். கடந்த 2018-ம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்ட போது உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கி பேசியுள்ளார். அந்த புகைப்படத்தை தற்போது கொரோனாவுடன் ஒப்பிட்டு, அதுவும் இத்தாலி பிரதமர் என்று தவறாக பரப்பி வருகின்றனர்.

brazil pm crying

கனிகா கபூர் பிரதமர் மோடியுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. கனிகா கபூருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், அவர் பிரதமருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து மோடியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. ஆனால் கொரோனா வேகமாக பரவி வரும் இந்த சூழலில் கனிகா மோடியை சந்திக்கவில்லை. அந்த புகைப்படம் 2018-ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

modi kanika kapoor

இதுஒருபுறமிருக்க கொரோனா தொடர்பாக பல்வேறு வதந்திகளும் பரவி வருகின்றன. வதந்திகள் கொரோனாவை விட வேகமாக பரவி வருகின்றன. கொரோனா பெருந்தொற்று உலகையே அச்சுறுத்தி கொண்டிருப்பதால் மக்கள் பீதியில் உள்ள இந்த நேரத்தில் இதுபோன்ற போலி செய்திகளும், வதந்திகளும் மக்களின் பயத்தை அதிகரிக்குமே தவிர, அதனால் வேறு எந்த பயனும் இல்லை.

ஏற்கனவே சமூக வலைதளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தாலும் கூட, இந்த செய்திகள் பரவுவதை தடுக்க முடியவில்லை. எனவே மக்கள் எந்த தகவலையும் உடனடியாக நம்பிவிடாமல், அதுகுறித்து ஆராய்ந்த பிறகு அவற்றை பகிர்ந்தால் போலி செய்திகள் பரவுவதை தடுக்கலாம்.. ஏனெனில் கொரோனாவை விட இந்த போலி செய்திகள் ஆபத்தானவை..

1newsnationuser1

Next Post

“ரிசர்வ வங்கி மேற்கொண்ட மாபெரும் நடவடிக்கைகள் நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும்..” பிரதமர் மோடி ட்வீட்..

Fri Mar 27 , 2020
ரிசர்வ வங்கி மேற்கொண்ட மாபெரும் நடவடிக்கைகள் நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் […]
modi

You May Like