90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..? பிள்ளைகளின் போனிற்கு வந்த தாயின் உல்லாச வீடியோக்கள்..! கள்ளக்காதலனின் கொடூர செயல்..!

கொரோனா பரவாத நாடுகள் எவை தெரியுமா..? இந்த 11 நாடுகளில் மட்டும் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை..!!

இதுவரை 186 நாடுகள் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளன. ஆனால் 11 நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இல்லை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆம்.. உண்மை தான் இதுகுறித்து தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்..

corona virus 12

கொரோனா வைரஸ்.. இந்த வார்த்தை தான் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப் படைத்து வருகிறது. மனித குலத்திற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸின் தான் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் உஹான் நகரில் தான் கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவத்தொடங்கியது.

பின்னர் அதன் தீவிரத்தை உணர்ந்த சீன அரசு விதித்த கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாகவும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாகவும் கொரோனாவின் தாக்கம் அங்கு ஒரளவு கட்டுக்குள் வந்தது. இதன் காரணமாக சீனாவில் 81,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டலும் கூட, அவர்களில் சுமார் 74,000 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை சுமார் 3200 பேர் பலியாகி உள்ளனர்.

corona virus n

ஆனால் மற்ற நாடுகளிலோ நிலைமை தலைகீழாக உள்ளது. உதாரணமாக உலகிலேயே அதிக உயிர்களை பலிகொடுத்த இத்தாலியில் கொரோனா காரணமாக 74,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 8,00க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக திகழும் அமெரிக்காவில் நிலைமை இன்னும் மோசம். அந்நாட்டில் இதுவரை 85,755 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது சீனாவை விட அதிக பாதிப்பு எண்ணிக்கை இருப்பதால், கொரோனா அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் தற்போது அமெரிக்க முதலிடத்தில் உள்ளது.

italy corona

சரி.. இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கொரோனா காரணமாக உலகம் சுமார் 5.5 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,044 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1.2 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையின் வீதம் குறைந்து வருகிறது. அதே நேரத்தில் கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.

உலகளவில் 197 நாடுகள் ஐ.நாவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தற்போது 186 நாடுகளில் கொரோனா பரவியுள்ளது. ஆனால் 11 நாடுகளில் இன்னும் கொரோனா சென்றடையவில்லை. சாலமன் தீவுகள், சியரா லியோன், சமோவா, செயிண்ட் வின்செண்ட், கிரெனடைன்ஸ், செயிண்ட் கிட், நெவிஸ், பலாவ், துவலு, வேனுவாட்டு, டிமோரிஸ் லெஸ்ட் ஆகியவை இந்த 11 நாடுகள்.

Coronavirus_outbreak_infection-1

இந்த நாடுகளில் கொரோனா தாக்கம் ஏற்படாததற்கு என்ன காரணம் தெரியுமா..? ஏனெனில் வெளிநாட்டினரின் நடமாட்டம் இந்த நாடுகளில் மிகமிக குறைவு. மேலும் இந்த நாடுகள் மற்ற எந்த நாட்டுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை. இந்த நாடுகள் அனைத்தும் உலகளவில் துண்டிக்கப்பட்டுள்ளன என்பதே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு சில நாடுகளில் ஓரிருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஃபிஜி, காம்பியா, காங்கோ, நேபாள், பூடான் உள்ளிட்ட நாடுகளில் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எது எப்படியோ, இந்த நாடுகளில் உள்ள மக்களாவது கொரோனா பீதியில்லாமல் நிம்மதியாக இருக்கட்டும்..

1newsnationuser1

Next Post

போன் செய்தால் போதும்... வீட்டுக்கே வரும் மளிகைப் பொருட்கள்... அசத்தும் மாநகராட்சி ...

Fri Mar 27 , 2020
144 ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்க வேண்டிய நிலையில் வெளியில் செல்வதைத் தவிர்க்க மளிகை பொருட்களை பெற வீட்டிலிருந்தவாறே போனில் ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம்என திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சத்தின எதிரொலியாக பொதுமக்கள் தங்களை பாதுகாத்துகொள்ள 144 ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்க வேண்டிய நிலையில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்ற அரசின் உத்தரவினைத் தொடர்ந்து, கொரோனா பரவுதலைத் தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மளிகை […]
Home phone groceries ... Astana Corporation ...

You May Like