திருப்பூரில் அரசு பேருந்து இரு வண்ணங்களில் வந்ததால் பயணிகள் குழப்பமடைந்தனர்.

நேற்று திருப்பூர் நகரில் அரசு பேருந்து (டி.என்.,33 என்.2792) ஒன்று வித்தியாசமாக வலம் வந்ததுள்ளது. ஏனென்றால் முன் பகுதி டவுன் பஸ் போல் மஞ்சள் நிறத்திலும் பக்கவாட்டில் சர்வீஸ் பஸ் போன்று பச்சை நிறத்திலும் இருந்துள்ளது. இதனால் பயணிகள் மத்தியில் குழப்பம் ஏற்ப்பட்டது.
இது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் தரப்பில் விளக்கம் கேட்ட போது, திருப்பூர் – காங்கேயம் வழித்தடத்தில் இந்த பேருந்து இயக்க்படுவதாகவும் டிப்போ -1 லிருந்து இயக்க்படுவதாகவும் தெரிவித்தனர். இதற்கு முன் டிப்போவில் இந்த நிற பெயின்ட் இருந்தது இப்பொது மாற்று பேருந்தாக இயக்க அப்படியே கொண்டு வரப்பட்டுள்ளது என ஏதேதோ சொல்லி மழுப்பினர்.