அடி தூள்… பட்டய படிப்புகளுக்கான நேரடி மாணவர் சேர்க்கை..! உடனே விண்ணப்பிக்க வேண்டும்…!

மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகத்தால், சென்னை கிண்டியை தலைமையிடமாக கொண்டு நடத்தப்பட்டு வரும், மத்திய பெட்ரோகெமிக்கல்ஸ் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் (CIPET) பட்டம் மற்றும் பட்டய படிப்புகளை நடத்தி வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், நுழைவுத் தேர்வு ஏதுமின்றி, நேரடி சேர்க்கை மூலம் 3 ஆண்டுகால பட்டய படிப்பை (DPMT/DPT) படிக்கலாம்.

இதேபோன்று, கல்லூரிகளில் அறிவியல் பட்டப்படிப்பை முடித்தவர்கள் 2 ஆண்டு கால முதுநிலை பட்டப்படிப்பில் பிளாஸ்டிக் செயல்முறை மற்றும் சோதனை பயிற்சியில் நேரடியாக சேரலாம். 12-ம் வகுப்பு பயின்று உயர் கல்வியை பெற முடியாதவர்கள், 3 ஆண்டு கால பட்டயப்படிப்பில் நேரடி சேர்க்கை மூலம் 2-ம் ஆண்டில் நேரடியாக அனுமதி பெற்று படிப்பை முடிக்கலாம்.

நேரடி சேர்க்கைக்கான கடைசி தேதி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 16-ந் தேதி  ஆகும். மேலும் விவரங்களுக்கு, 93600 98600 அல்லது 96002 54350 தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் முகவரி – Chennai@cipet.gov.in – ல் தொடர்பு கொள்ளுமாறு சென்னையில் உள்ள சிப்பெட் நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் மற்றும் தலைவர் ஸ்ரீகாந்த் சிராலி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Also Read: Monkey pox: இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது உறுதி…! தடுக்க ஒரே வழி இதை கடைபிக்க வேண்டும்….!

Vignesh

Next Post

#Breaking: இந்தியாவில் உச்சத்தில் செல்லும் கொரோனா வைரஸ் பாதிப்பு...!

Sat Jul 16 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 20,044 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 56 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 18,301 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
ஒரே பள்ளியில் படிக்கும் 19 மாணவர்களுக்கு கொரோனா..! விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு..?

You May Like