காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பதால் உடலுக்கு இவ்வளவு ஆபத்தா.!

டீ, காபி குடிப்பது உடலுக்கு கேடு தரும் என்று பலரும் தெரிவிக்கின்றனர். அதிலும் நம்மில் பலரும் அதிகாலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ, காபியை குடிப்போம். இது உடலுக்கு மிகப்பெரிய அளவில் தீங்கு ஏற்படுத்துகிறது. இதில் உள்ள காஃபின் வயிற்றின் அமில உற்பத்தி தன்மையை அதிகரிக்கிறது. இதன் காரணமாக நெஞ்செரிச்சல், வயிறு எரிச்சல் மற்றும் குமட்டல் உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகளை இது ஏற்படுத்துகிறது.

அது மட்டுமல்லாமல் காஃபின் நமது உடலில் சிறுநீரை அதிகரிக்கும். எனவே உடலில் அதிகப்படியான நீரிழப்பு ஏற்படும். மேலும் பதட்டம், தலைவலி, தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சினைகளும் வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பதால் ஏற்படலாம். வெறும் வயிற்றில் டீ குடிப்பதோடு மட்டுமல்லாமல் பலரும் காலை உணவுக்கு முன்பு அல்லது காலை உணவு சாப்பிட உடனே டீ குடிப்பார்கள். வெறும் வயிற்றில் குடிப்பதை விட சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிப்பதால் பாதிப்பு சற்று குறைவு தான்.

அதிலும் கீழ்காணும் பல்வேறு பிரச்சனைகள் இருப்பவர்கள் வெறும் வயிற்றில் டீ காபி குடிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இரைப்பை அழற்சி நோய் உள்ளவர்கள், வயிற்றுப் புண், தோலில் அலர்ஜி உள்ளவர்கள், தூக்கப் பிரச்சனைகள் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் பதட்டம் உள்ளவர்கள் டீ, காபியை வெறும் வயிற்றில் எக்காரணத்தைக் கொண்டும் குடிக்கவே கூடாது என்று மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

தமிழ்நாட்டில் அதிகாலையிலேயே அதிரடி காட்டும் என்.ஐ.ஏ. அதிகாரிகள்..!! சிக்கிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள்..?

Fri Feb 2 , 2024
தமிழ்நாட்டில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலையிலேயே என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, நெல்லை, மதுரை, சிவகங்கை ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. பிற நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சோதனை வளையத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

You May Like