மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

நாளை முதல் தமிழக மாவட்ட எல்லைகள் மூடல்.. 144 தடை உத்தரவு.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு..

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் எல்லைகளும் நாளை மாலை முதல் மூடப்படும் என்றும், 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

tn cm edapadi

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையில் இன்று மிகமுக்கியமான அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் “ கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க நாளை மாலை முதல் வரும் 31-ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் எல்லைகள் மூடப்படும்.

பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் விதமாக 144 தடை உத்தரவு அமலுக்கு வரும். இந்த தடை உத்தரவு காரணமாக, மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்சிக்கள் உள்ளிட்ட எந்த போக்குவரத்தும் இயங்காது.

அவசியமின்றி யாரும் வெளியே வரக்கூடாது. விடுதிகளில் தங்கி உள்ளவர்களுக்காக அம்மா உணவகம் இயங்கும். மாவட்ட எல்லைகள் மூடப்பட்டாலும், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் செல்வதற்கு தடையில்லை. அத்தியாவசியப் பணிகளை தவிர அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்படும். தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.

chennai lockdown

144 தடை உத்தரவு காரணமாக பணிக்கு வராமல் இருந்தால் சம்பள பிடித்தம் செய்யக் கூடாது. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் வகையில், மளிகைக்கடைகள், காய்கறி, பழக்கடைகள் இயங்கும். எனவே அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தடை இருக்காது. தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள் தொடர்பான விரிவான அறிக்கை இன்று மாலை வெளியாகும்” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

மிஷினை நிறுத்தினால் பல லட்சம் நட்டம்... தனியார் தொழிற்சாலையில் ஊரடங்கின் போது வேலை...அதிகாரிகள்-ஊழியர்கள் வாக்குவாதம்...

Mon Mar 23 , 2020
திருவொற்றியூரில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நேற்று ஒருநாள் அரசு ஊரடங்கு உத்தரவை அறிவித்த நிலையில், தனியார் தொழிற்சாலையில் வேலைக்கு வர கட்டாயப்படுத்தியதால் அதிகாரிகளுடன் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். கொரோனா வைரஸ் அனைத்து மக்களையும் அச்சுறுத்தி வரும் நிலையில், நோய் தொற்று பரவாமல் தங்களை பாதுகாத்துகொள்ளவும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், நேற்று ஒருநாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு ஊரடங்கு உத்தரவை […]
thiruwotriyur Millions lost if the machine stopped ... Workers at private factory curfew ... Officers-Employees arguing ...

You May Like