"அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..! ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி… இந்த மாவட்டங்களில் மட்டும் அதீத கனமழையும், பெரும் பாதிப்பை ஏற்படுத்துமாம் "புரவி" புயல்… வானிலை ஆய்வு மையம்.. மீண்டும் திறக்கப்படும் செம்பரம்பாக்கம் ஏரி.. சென்னை மக்களே அலர்ட்.. புரவி புயல் எதிரொலி…சென்னையில் 12 விமானங்கள் ரத்து… இந்தியாவில் இந்த ஒரு தேன் மட்டும் தான் கலப்படமில்லாத தேன் – ஜெர்மன் ஆய்வக சோதனை முடிவு

தமிழகத்தில் கொரோனாவை தடுக்க தன்னார்வலர்களின் உதவி தேவை – மாவட்ட ஆட்சியர்கள் அழைப்பு

volunteers1 1

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதோடு மக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய தன்னார்வலர்கள் உதவ முன்வரலாம் என மாவட்ட ஆட்சியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


உலகினையே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் ஆட்டிப்படைத்துவருகிறது. குறிப்பாக இன்று ஒரே நாளில் 17 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் பாதிப்பின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை கிருமி நாசினி தெளிப்பது, வீடு இல்லாமல் இருப்பவர்களை சமுதாய கூடங்களில் தங்க வைத்து உணவு அளிப்பது போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட தன்னார்வலர்கள் தேவைப்படுவதாகவும், விருப்பமுள்ளவர்கள் இணைய தள மற்றும் தொலைப்பேசி எண்ணில் மூலம் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துவருகின்றனர்.

volunters tuticorin 1

அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிவிக்கையில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நிவாரணப்பணிகளில் ஈடுப்பட்டு வரும் அரசு சார் பணியாளர்களுக்கு உதவிடும் வகையில் தன்னார்வலர்கள் தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும்
மக்கள் நலன் காக்கும் இந்த பணியில் சேரவிரும்பும் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள், மற்றும் நிறுவனங்கள் தங்களது விருப்பம் மற்றும் தொடர்பு விபரங்களை இணையதள பதிவிற்கு http://www.thoothukudi.online என்ற இணைய முகவரி மூலமாகவும் மொபைல் பதிவிற்கு MUTHU MAVATTAM MOBILE APP என்ற மொபைல் செயலி மூலமாகவும் பதிவு செய்யலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

volunteers thirupur 1

இதே போன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திக்கேயன், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் தலைமையில் சமுதாய பணியில் ஈடுபட விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் 99655 60256 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களை இணைத்து கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

1newsnationuser3

Next Post

கிடுகிடுவென உயர்ந்த இறைச்சி விலை... அலைமோதும் மக்கள்...

Mon Mar 30 , 2020
சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் ஆடு, கோழி, மீன் என அனைத்து இறைச்சிகளும் கிடுகிடுவென விலை உயர்ந்துள்ளது. பிற மாநிலங்களில் இருந்து ஆடுகள் வரத்து குறைந்துள்ளதால் ஆட்டிறைச்சியின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.1200க்கு விற்கப்பட்டது. மேலும் கோழிகறி மூலம் கொரோனா பரவுவதாக தவறான வதந்திகளால் மக்கள் கோழிகறி வாங்க முன்வரவில்லை அதனால் கோழியின் விலையும் இதுவரை காணாத விலைக்கு ரூ.50,80,100,120 என விற்ற கோழிகறி தற்போது கோழிக்கறியால் கொரோனா […]
Shake-high-meat-price-second hot-people

You May Like