fbpx

தலையில் கிரீடம் கையில் சூலம்..! பக்தர்களுக்கு ஆசி வழங்கிய அன்னபூரணி..!

தலையில் கிரீடம் சூட்டி, கையில் சூலம் ஏந்தி பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் அளித்துள்ளார் அன்னபூரணி.

ஆதிபராசக்தியின் மறு அவதாரம் எனக்கூறி ஆசிரமம் நடத்தி வந்த அன்னபூரணி, தலையில் கிரீடம் சூட்டி, கையில் சூலம் ஏந்தி அம்மன் திரைப்பட நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அம்மனாக வேடமிட்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். ஆயிரம் சர்ச்சைகள் தன்னை சுற்றி வந்தாலும், திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பெண்ணாத்தூர் இராஜாதோப்பு பகுதியில் ஆசிரமம் ஒன்றை அமைத்து அசராமல் ஆசி வழங்கி வருகிறார் அன்னபூரணி.

தலையில் கிரீடம் கையில் சூலம்..! பக்தர்களுக்கு ஆசி வழங்கிய அன்னபூரணி..!

தலையில் ஜொலிக்கின்ற கிரீடம் சூடி, கையில் கனத்த சூலம் ஏந்தி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அன்னபூரணிக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டிருக்கின்றது இந்த கெட்டப் செட்கள். இந்தியாவில் உள்ள 100 பக்தர்களுக்கும் அயல் நாட்டில் வாழும் 25 பக்தர்களுக்கும் தனது சக்தியை கடத்தி கடவுளை உணரச்செய்திருப்பதாக கூறிவரும் இவர், பக்தர்கள் சூட்டிய இந்த கிரீடம் தங்கம் இல்லை வெறும் செம்பினால் ஆனது என்று தெரிவித்துள்ளார். கடவுளுக்கு உருவம் கிடையாது என்று தெரிவித்த அன்னபூரனி, இந்த கிரீடத்தை பக்தர்கள் தன் மீது உள்ள நன்றி உணர்வால் தனக்கு போட்டு அழகு பார்த்ததாக ஒப்புக் கொண்டார்.

தலையில் கிரீடம் கையில் சூலம்..! பக்தர்களுக்கு ஆசி வழங்கிய அன்னபூரணி..!

இனி குணப்படுத்த இயலாது என்று மருத்துவரால் கைவிடப்பட்ட இருதய நோயாளியை ’சரியாகிவிடும்’ என்ற ஒற்றை வார்த்தையால் சரிசெய்ததாக தெரிவித்த அன்னபூரனி, தன்னிடம் முழுமையாக சரணாகதி அடைந்தால் என்ன நோயாக இருந்தாலும் சரிசெய்துவிடுவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதே நேரத்தில் மருத்துவம் படிக்காத ஒருவர் நோய்களை குணப்படுத்திவிடுவேன் என்று கூறுவது இந்திய மருத்துவ மருத்துவ விதிகளுக்கு எதிரானது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Chella

Next Post

காஷ்மீரில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 6 ITBP வீரர்கள் பலி.... 30-க்கும் மேற்பட்டோர் காயம்..

Tue Aug 16 , 2022
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பேருந்து ஒன்று ஆற்றில் விழுந்ததில் இந்தோ-திபெத் எல்லைக் காவல்துறையை சேர்ந்த (ITBP) 6 வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணிக்காக இந்தோ-திபெத் எல்லைக் காவல்துறையை சேர்ந்த வீரர்கள் சந்தன்வாரி பகுதிக்கு அனுப்பப்பட்டனர்.. இந்நிலையில் அவர்கள் தங்கள் பணியை முடித்துவிட்டு சந்தன்வாரியிலிருந்து பஹல்காம் நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். சந்தன்வாரி அருகே பேருந்தின் பிரேக் வேலை செய்யாததால் ஆற்றில் […]

You May Like