fbpx

வீட்டுக்குள் தொங்கிய நிலையில் கிடந்த சடலம்..! திருட சென்ற வீட்டில் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்..!

தேன்கனிக்கோட்டையில் நள்ளிரவில் திருட சென்ற வீட்டில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை எம்ஜிஆர் தெருவில் நள்ளிரவு நேரத்தில் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் அங்குள்ள பல்வேறு வீடுகளின் கதவுகளை பூட்டி விட்டு திருட முயன்றுள்ளது. அப்போது, அந்த கும்பலில் உள்ளவர்கள் அங்குள்ள வீடுகளின் மேல் தாவி குதித்து ஓடியுள்ளனர். இதில், அப்பகுதியை சேர்ந்த மாது என்பவரது ஆஸ்பெட்டாஸ் சீட் வீட்டின் மேல் அவர்கள் ஓடிய போது வீட்டின் மேலே சென்ற மின்சார ஒயரில் இருந்த மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சூளகிரி பகுதியைச் சேர்ந்த மன்சூர் என்ற 18 வயது வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் ஆஸ்பெட்டாஸ் சீட்டை உடைத்து கொண்டு வீட்டுக்குள் தொங்கிய நிலையில் கிடந்தது.

வீட்டுக்குள் தொங்கிய நிலையில் கிடந்த சடலம்..! திருட சென்ற வீட்டில் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்..!

இதுகுறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் அப்பகுதிக்கு உடனே சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்ட போலீசார், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மன்சூருடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

காதலிக்க மறுத்த மாணவி; வற்புறுத்திய வாலிபர் செய்த வெறித்தனம்..!

Sat Aug 27 , 2022
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த சென்னசமுத்திரம் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த மார்கண்டன் மகன் விஜயகுமார் (25). இவர் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவரிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி இருக்கிறார். மாணவி அவரை காதலிக்க மறுத்துள்ளார். இதனால் விஜயகுமார் தான் வைத்திருந்த கத்தியல், அந்த மாணவியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகையமடைந்த மாணவி வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருறார். இதுகுறித்து கலவை காவல்துறையினர் […]

You May Like