fbpx

கள்ள பொண்டாட்டியை வைத்து கள்ளா கட்டிய காவலர்..!! பக்கா மூவ்..!! வலையில் சிக்கியது யாரெல்லாம் தெரியுமா..?

கள்ளக்காதலியை அரசு அதிகாரி என கூறி 30 தொழிலதிபர்களை ஏமாற்றி, ரூ.15 கோடிக்கு மேல் சொத்து வாங்கி குவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகராஜ் (41). இவர், நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வந்தார். இவர், ஓசூரைச் சேர்ந்த வளர்மதியை மதுரை டிஆர்ஓ எனக்கூறி ரியல் எஸ்டேட் அதிபர் சசிகுமார் (40) என்பவருக்கு அறிமுகப்படுத்தி, பட்டா வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து சசிகுமார் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிந்து ஏட்டு முருகராஜ் மற்றும் வளர்மதியை கைது செய்து விசாரித்தனர். இதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”முருகராஜுக்கும் வளர்மதிக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இருவருமே சொகுசாக வாழ ஆசைப்பட்டுள்ளனர். இதற்காக இருவரும் திட்டம் தீட்டி மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

வளர்மதி, தன்னை டிஆர்ஓ மற்றும் டாக்டர் என கூறியும், முருகராஜ் தன்னை இன்ஸ்பெக்டர் எனக்கூறியும் 30-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். மோசடியில் சிக்கினால் புகார் கொடுக்க தயங்கும் சில தொழில் அதிபர்களை குறிவைத்து முருகராஜ், தனது மனைவி டிஆர்ஓ என்றும் தான் பிரச்சனை இல்லாமல் வேலையை முடித்து விடுவதாகவும் கூறி அணுகி உள்ளார்.

பின்னர் வளர்மதி அந்த நபர்களிடம் டிஆர்ஓ தோரணையில் பேசி ஒவ்வொருவரிடமும் பல லட்சங்களை சுருட்டியுள்ளார். வளர்மதி தனது பெயரில் 5-க்கும் மேற்பட்ட வங்கிகளில் புதிதாக கணக்கு தொடங்கியுள்ளார். அதில், சில வங்கி கணக்குகளில் முருகராஜ் பெயரை தனது கணவர் என்று அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளார். அந்த அதிகாரப்பூர்வ கணக்குகளில் மட்டுமே கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இவர்களது வங்கிக் கணக்கில் சுமார் ரூ.15 கோடிக்கு பணப்பரிவர்த்தனை நடந்து உள்ளது.

இன்னும் சில வங்கி கணக்குகளும் இருப்பதால் மோசடி தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என போலீசார் தெரிவித்தனர். கைதான முருகராஜ், வளர்மதி ஆகியோரின் அடையாள அட்டைகளை வைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்ய இருக்கிறோம். பின்னரே எவ்வளவு சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனர் என்ற விவரம் தெரியவரும்” இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இந்த மோசடியில் வளர்மதியை நெல்லை சந்திப்பு போலீசார் கைது செய்த நிலையில், அவரது வீட்டில் சென்று சோதனையிட்டு அங்கு ஏராளமான சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். அந்த ஆவணங்கள் அனைத்தும் வளர்மதியிடம் இருந்து முருகராஜிக்கு மாற்றி எழுதிக் கொடுக்கப்பட்ட சொத்து ஆவணங்களாகும். அந்த ஆவணங்களில் ஓசூரில் 9 சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதில், அங்குள்ள 30 ஏக்கர் தோட்டம், கண்ணாடி மாளிகை, ஏற்காட்டில் உள்ள தோட்டம் உள்ளிட்டவைகளை வளர்மதி முருகராஜ் பெயரில் எழுதி கொடுத்ததாக ஆவணங்கள் கிடைத்துள்ளன.

இருப்பினும், அந்த ஆவணங்களின் உண்மை தன்மை குறித்து முழுமையாக ஆராய்ந்த பின்னரே சொத்து விவரங்கள் தெரியவரும். கைதான ஏட்டு முருகராஜ், வளர்மதியுடன் சேர்ந்து பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது உறுதியானதை தொடர்ந்து, அவரை சஸ்பெண்ட் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா உத்தரவிட்டுள்ளார்.

Read More : ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு..!! நவம்பர் 7ஆம் தேதியே கடைசி..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

English Summary

The incident of cheating 30 businessmen by pretending to be a government official and buying property worth more than Rs.15 crore has created a stir.

Chella

Next Post

ஜம்மு - காஷ்மீரில் முன்னிலை வகிக்கும் இந்தியா கூட்டணி..!! இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..!!

Tue Oct 8 , 2024
Congress workers in Delhi are celebrating by giving sweets to the public due to the situation in which the Indian alliance is winning in Jammu and Kashmir.

You May Like