மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கி, இன்றுடன் 45 ஆண்டுகள் நிறைவடைந்ததால், ரயில்வே ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
சென்னைக்கு மதுரையில் இருந்து புறப்படும் அதிவேக ரயிலான வைகை எக்ஸ்பிரஸ் 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இதேபோல சுதந்திர தின நன்னாளில் குறுகிய இருப்பு பாதையில் இயக்கப்பட்டது. இந்த ரயிலானது மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாச்சலம், செங்கல்பட்டு வழியாக சென்னை வந்தடையும். கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்குள் மதுரை சந்திப்பில் இருந்து சென்னை வந்துவிடும்.
குறுகிய ரயில் இருப்பு பாதையில் இயங்கி வந்த ‘மதுரை புயல்’ வைகை எக்ஸ்பிரஸ் 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதியில் இருந்து அகலப்பாதைக்கு மாற்றப்பட்டது. இந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கி 45ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து, ரயில்வே ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.