மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

ஒருபுறம் அன்பழகனுக்கு புகழாரம் சூட்டிய அரசியல் தலைவர்கள்.. மறுபுறம் அவரின் சாதி குறித்த தேடலில் ஈடுபட்ட இணையவாசிகள்..

அன்பழகனின் இழப்பு தமிழகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அவர் என்ன சாதி என்று கூகுளில் அதிகாமானோர் தேடியதாக தகவல் வெளியாகி உள்ளது.

dmk anbazhagan

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக, கடந்த 24-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் அன்பழகனின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 98.

இதனையடுத்து, சென்னை கீழ்ப்பாக்கத்ட்தில் உள்ள அவரது இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, திருமாவளவன், வைகோ, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அன்பழகனின் இழப்பு தமிழகத்திற்கு பேரிழப்பு என பல்வேறு அரசியல் தலைவர்களும் புகழாரம் சூட்டினர்.

இந்நிலையில் இன்று மாலை அன்பழகனின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான திமுகவினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி ஆகியோர் அன்பழகனின் இறுதிச் சடங்கில் கண்ணீர் விட்டு அழுதனர். இதனைத் தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் வேலங்காடு மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

anbazhagan funeral

இதுஒருபுறமிருக்க, இன்று அன்பழகன் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூகுளில் பலர் தேடியுள்ளனர். சுமார் 1 லட்சம் பேர் அன்பழகனின் சமூகத்தை இணையதளத்தில் தேடியுள்ளதாக கூறப்படும் நிலையில், அதில் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர் என்று பதில் கிடைத்துள்ளது.

சாதி ஒழிப்பு, சமூக நீதி ஆகியவற்றை பிரதான கொள்கைகளாக கொண்டிருக்கும் திராவிடக் கட்சியின், முதுபெரும் தலைவர் இறந்தவுடன் அவர் என்ன சாதி என்று தேடியுள்ளது நகை முரணாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் திராவிட கட்சிகள் சாதியை ஒழிப்பதற்கு பதிலாக, அவற்றை வைத்து அரசியல் செய்து வருகின்றனர் என்ற முன்வைக்கப்படும் குற்றச்சாட்டையும் மறுக்க முடியவில்லை.

1newsnationuser1

Next Post

அர்ஜுமன் நடிக்கும் பொல்லாத உலகில் பயங்கர கேம்...கிரைம் திரில்லர் திரைப்படம்...கோடை விடுமுறையில் வெளியீடு...

Sat Mar 7 , 2020
ஜிடிஆர் சினிமாஸ் தயாரிப்பில், ‘தாதா 87’ புகழ் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகிவரும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படப்பிடிப்பின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இத்திரைப்படம் வருகின்ற கோடை விடுமுறை கால வெளியீடாக அமையும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். ஜிடிஆர் சினிமாஸ் தயாரிப்பில், ‘தாதா 87’ புகழ் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள கிரைம் திரில்லர் திரைப்படத்தை […]
movie

You May Like