“ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்.. தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்! 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா..? தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்.. தொப்புள்கொடியை தாயத்தாக கட்டுவது மூடநம்பிக்கையா….? மறைக்கப்படும் அறிவியல்..! "ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்"..! கன்னடத்தில் தேர்ச்சி பெற்ற சின்னம்மா..! விடுதலையில் அரசியல் விளையாட்டு..! இதுதான் சின்னம்மாவின் புது ரூட்டு..! 2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம்! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு! 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல்! 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு! ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி? சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்..! ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா?.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம்! குட்நியூஸ்..!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. Record Break..!! சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..?

திமுக பொருளாளரை நியமித்து ஸ்டாலின் அறிவிப்பு

திமுக பொருளாளர் பதவியிலிருந்து விலகுவதாக, துரைமுருகன் கொடுத்த ராஜினாமா கடிதத்தின் அடிப்படையில் தான் எடுத்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin n

திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் மறைவால், அப்பொறுப்பு காலியாக உள்ளது. இந்நிலையில், பொதுச் செயலாளர் பொறுப்புக்குப் போட்டியிட உள்ளதால், பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக, துரைமுருகன் தன்னிடம் கடிதம் அளித்ததாகவும், அவரின் விலகலை ஏற்றுக்கொள்வதாகவும் கடந்த மார்ச் மாதம் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, மார்ச் 29-ம் தேதி திமுக பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்வு நடைபெறுவதற்காக அக்கட்சியின் பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் கொரானா அச்சுறுத்தல் காரணமாக, திமுக பொதுக்குழுக் கூட்டம் மறுதேதி அறிவிப்பின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

download 33

இந்நிலையில், துரைமுருகன் கொடுத்த ராஜினாமா கடிதத்தின் அடிப்படையில் தான் எடுத்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“கொடிய நோயான கொரானா அச்சுறுத்தும் நேரத்தில், திமுக சட்ட விதி: 17-ஐ பயன்படுத்தி, பொதுக்குழுவை கூட்டி, பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்வு செய்ய முடியாத அசாதாரண சூழ்நிலை உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு அப்பொதுக்குழு கூடும் வரையில், திமுக சட்ட விதி: 18-ன் கீழ் எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின்படி, துரைமுருகன் கொடுத்த ராஜினாமா கடிதத்தின் பெயரில் நான் எடுத்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து அவரே பொருளாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என அறிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்

1newsnationuser4

Next Post

கன்னியாகுமரி: அண்ணனை காதலித்து கர்ப்பமான 17 வயது சிறுமி

Wed Jun 3 , 2020
கன்னியாகுமரியில் அண்ணன் உறவுமுறை கொண்டவனுடன் நெருங்கிப்பழகி கர்ப்பமடைந்த சிறுமிக்கு, கருக்கலைப்பு செய்யப்பட்ட நிலையில் அந்த இளைஞன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான். கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி அடுத்த மணக்கரை என்ற கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 4 மாதம் கர்ப்பமாக உள்ளதாக பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். […]
download 34

You May Like