பெற்றோரை இழந்து தவித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரக்கன்…சென்னையில் அதிர்ச்சி… ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்… மத்திய அரசின் புதிய அதிரடி திட்டம்..! இந்த 'பசுமை வரி' யாரெல்லாம் கட்ட வேண்டும்..? எப்போது முதல்..?

எடப்பாடி பழனிசாமியை விஞ்சிய ‘சூப்பர்’ முதல்வர்களின் கையில் நிர்வாகம்..? ஒவ்வொரு அறிவிப்பிலும் முரண்பாடுகள் ஏன்..? ஸ்டாலின் கேள்வி..

எடப்பாடி பழனிசாமியை விஞ்சிய சூப்பர் முதல்வர்களின் கையில் நிர்வாகம் இருக்கிறதா என்று மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை

இதுதொடர்பாக திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ சுகாதாரத் துறைச் செயலாளரை மாற்றிய கையோடு, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் அமைச்சரையும் மாற்றி இருக்க வேண்டும்!
இக்கட்டான கட்டத்தில் பேரிடர் தணிப்புப் பணிகளில், இனியேனும் முறையான ஒருங்கிணைப்பை உறுதி செய்திட சுகாதாரத் துறையை, தமிழக முதலமைச்சரே தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளர்.

மேலும் “ ஜூன் 12 அன்று, கொரோனா தொற்று எண்ணிக்கை 40,000-ஐ கடந்துள்ளது. சென்னையில் மட்டும் 28,000க்கும் அதிகமான நோய் தொற்றாளர்கள் உள்ளனர். இறப்பு எண்ணிக்கை 367. ஆனால் இந்த நோய்த் தொற்று காலத்தில், அதிமுக அரசின் முன்னுக்கு பின் முரணான நடவடிக்கைகளும், அரசியல் சுயநலக் காரணங்களும் மக்களுக்கு அதிர்ச்சியையும் அயற்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவிட் 19 பாசிட்டிவ் நோயாளிகள், இறந்திட நேரும் போது, ‘நெகட்டிவ்’ என்று குறிப்பிடப்படுவது. தலைமை செவிலியர் ஜோன் மேரியின் கேஸ் ஷீட்டில் பாசிட்டிவ் என்றிருந்த நிலையில், இறப்பு அறிக்கையில் நெகட்டிவ் என ஏன் மாற்றப்பட்டது என்ற கேள்விகளுக்கு இன்னமும் பதில் இல்லை..

வீட்டில் ஒருவருக்கு கொரோனா என்றாலும், குடும்பத்தினர் அனைவரும் முகாமிற்கு அனுப்பப்படுவார்கள்.. பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை என்றெல்லாம் மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினால், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் என்ற பெயரில் மேலும் குழப்புகிறார்.

ஒவ்வொரு அறிவிப்பிலும் முரண்பாடுகள் ஏன்..? முடிவுகளை யார் எடுக்கிறார்கள்..? அமைச்சர் – அதிகாரிகளிடையே போட்டியினால் இந்த குழப்பங்களா..? எடப்பாடி பழனிசாமியை விஞ்சிய சூப்பர் முதல்வர்களின் கையில் நிர்வாகம் இருக்கிறதா..? ஜூலை மாதத்தில் நோய்த் தொற்று கடுமையாக இருக்கும் என அரசு தலைமை வழக்கறிஞர், அரசு சார்பில் தெரிவிக்கிறார்.

ஆனால் முதலமைச்சரோ ஊடகத்தினரிடம் ஏகடியம் பேசி, அவரே மாஸ்க் அணியாமல், இடைவெளியின்றி விழாக்களில் பங்கேற்கிறார். நிலைமை கைமீறிப் போய் பேரிட சூழலில் இனியேனும், வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு, எத்தனை நோயாளிகள் – பரிசோதனைகள் – மரணங்கள் என்பதை மறைக்காமல் வெளியிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

பாரதிராஜாவின் கண்கள்.. மூத்த ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்..

Sat Jun 13 , 2020
பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கண்ணன் இன்று காலமானார். அவருக்கு வயது 61. இயக்குநர், எடிட்டர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் எனப் பன்முக திறமைக் கொண்ட ஏ.பீம்சிங்கின் மகன் கண்ணன். இவர் தமிழ் சினிமாவின் மூத்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகவும், பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராகவும் அறியப்பட்டவர். ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், காதல் ஓவியம், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது, கடலோர கவிதைகள் கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட […]
பாரதிராஜாவின் ஆஸ்தான

You May Like