2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்? அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு..? தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா ? முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா..? மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி..! துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு..! "ஐயயோ.. என் புருஷன் வரப்போறாரு.." பயத்தில் கள்ளகாதலனுடன் கம்பி நீட்டிய மனைவி..! தவிக்கும் குழந்தைகள்..! "பிரிஞ்சு மூணு மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள வேறு ஒருத்தியோட…" கத்தியால் குத்திய மனைவி..! மாந்திரீகவாதியை கொடூரமாக குத்தி கொலை செய்த நபர்..! பதறவைக்கும் பகீர் பின்னணி..! 'பார்லர்' CEOவிற்கு கொலை மிரட்டல்..! டிரம்ப் ஆதரவாளர்கள் அதிகம் இருப்பது தான் காரணமா..? கும்பகர்ணனை போல மாதக்கணக்கில் தூங்கும் கிராம மக்கள்.. இதுதான் காரணமாம்..!!

ஊரடங்கு மட்டுமே தீர்வு என்ற மாயையிலிருந்து அதிமுக அரசு வெளியே வர வேண்டும் : மு.க ஸ்டாலின் ட்வீட்

ஊரடங்கு மட்டுமே தீர்வு என்ற மாயையிலிருந்து அதிமுக அரசு முதலில் வெளியே வர வேண்டும் என்று மு.க ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

ஊரடங்கு மட்டுமே

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பரவலின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே இந்த 4 மாவட்டங்களில் மட்டும் வரும் 19-ம் முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். ஊரடங்கு தீவிரப்படுத்தப்படுவதால், பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை

இந்நிலையில் திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவரின் பதிவில் “ ஊரடங்கு மட்டுமே தீர்வு என்ற மாயையிலிருந்து அதிமுக அரசு முதலில் வெளிவந்து விரிவான பரிசோதனைகள், தொற்றுக்கான தொடர்புகள், உரிய சிகிச்சைகளே கொரோனாவை தடுக்கும் வழி என்பதை உணர வேண்டும். கொரோனா ஒழிப்பு தவிர மாற்றுச் சிந்தனை இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் அரசு செயல்பட வேண்டும்!

மீண்டும் முழு ஊரடங்கு என்பது வதந்தி என்று இரண்டு நாட்களுக்கு முன்பு சொன்ன முதலமைச்சர், 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு என்று இன்று அறிவிக்கிறார். ஆட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை! இந்த முழு ஊரடங்கையாவது முறையான ஊரடங்காக அமல்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா..? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அதிர்ச்சி..

Tue Jun 16 , 2020
காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ நேற்று இரவு ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் மூச்சுத்திண்றல் காரணமாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டேன். எனது உடல்நிலை குறித்த தகவல்களை தொடர்ந்து தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சத்யேந்தர் ஜெயின் விரைவில் குணமாக வேண்டும் என்று […]
சுகாதாரத்துறை

You May Like