திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனின் குடும்பத்தார் 4 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரானா பாதிப்பால் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். ஆரம்பத்தில் மிகுந்த மூச்சுத் திணறல் ஏற்பட்டு வெண்டிலேட்டார் வசதி கொண்டு சுவாசித்து வந்த நிலையில், தீவிர சிகிச்சைக்கு பின் அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, முன்னெச்சரிக்கையாக ஜெ. அன்பழகன் குடும்பத்தார்க்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவரது மனைவி, மகன், மற்றும் மருமகள், பேத்தி ஆகியோருக்கும் ெகாரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.