‘திமுகவின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரிப்பு’..! சசிகலா காட்டம்

திமுகவின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதிகளில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா, தொண்டர்கள் மத்தியில் பேசும்போது, “பல அடக்குமுறைகள் இருந்த போதும் அம்மாவும் நானும் சேர்ந்து கழகத்தை கட்டி காத்துள்ளோம். அம்மாவிடம் இருந்த என் நட்பு புனிதமானது. அம்மா என் மீது வைத்திருந்த அன்பு இந்த உலகத்தில் உள்ள யாரும் வைத்திருக்க முடியாது. என்னை அம்மாவிடம் இருந்து பிரிக்க நிறைய பேர் சூழ்ச்சிகளை செய்தார்கள். அதையெல்லாம் முறியடித்து சாதனை படைத்து தொடர் வெற்றிகளை கண்ட கழகம் இன்று தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் களைய வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

திமுகவின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரிப்பு..! சசிகலா காட்டம்

எந்த திமுக கட்சிக்கு எதிராக நம் எம்ஜிஆர் கட்சி ஆரமித்தாரோ, அந்த திமுக ஆட்சியை கூட எதிர்க்க ஆளில்லை. சுயநலத்திற்காக சிலர் கட்சியை கூறுபோட நினைக்கிறார்கள். இது தொண்டர்கள் மத்தியில் வெறுப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 13 மாதங்கள் ஆகிவிட்டது. அவர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதே சமயம் அறிவிக்கப்படாத மின்வெட்டும் அதிகரித்து வருகிறது. இந்த ஆட்சியாளர்களை பற்றி தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள். அடுத்து விரைவில் அமைய போவது நமது கழக ஆட்சிதான்” என்று பேசினார்.

Chella

Next Post

“ வழக்குகள் மூலம் அதிமுகவை ஒழித்துவிடலாம் என்று நினைக்கின்றனர்..” முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..

Fri Jul 8 , 2022
அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ்.. இவர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.58,4438,252 அளவுக்கு சொத்து சேர்த்துள்ளது புகார் எழுந்துள்ளது.. இதுகுறித்து காமராஜ், டாக்டர் இனியன், டாக்டர் இன்பன், சந்திரசேகர், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு நேற்று செய்துள்ளது.. இந்த வழக்கினை தொடர்ந்து சென்னை, கோவை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் […]
’எங்க விஷயத்துல நீங்க மூக்கை நுழைக்காம இருந்தாலே போதும்’..!! ஜெயக்குமார் காட்டம்..!!

You May Like