மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…! துடைப்பத்தைச் சரியாக பயன்படுத்தினால் இவ்வளவு நன்மையா ? தெரிந்து கொள்ளுங்கள்….

“எனக்கும் ஒரு கதை யோசிங்க..” இளம் இயக்குனரிடம் வேண்டுகோள் விடுத்த ரஜினி.. ஆனாலும் வருத்தத்தில் இயக்குனர்..

இளம் இயக்குனர் தேசிங் பெரியசாமியிடம் தனக்கும் ஒரு கதை ரெடி பண்ணுங்க என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

kannum kannum

துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி, கௌதம் மேனன் ஆகியோர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் கண்ணுன் கண்ணும் கொள்ளையடித்தால். அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கிய இப்படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் இந்த படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குனரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ரஜினிகாந்த் பெயரை குறிப்பிடாமல் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், சூப்பர், எக்ஸலண்ட், என்று ரஜினி பாராட்டியதாகவும், தனக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று ரஜினி வாழ்த்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த நேரத்தில் கடவுளுக்கும், இந்த நாளுக்காக காத்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தேசிங் பெரியசாமி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ரஜினி, தேசிங்கிடம் பேசிய தொலைபேசி ஆடியோ வெளியாகி வைரலானது. அதில் படத்தை புகழ்ந்து பேசியுள்ள ரஜினி, தனக்காகவும் ஒரு கதை ரெடி பண்ணுங்க என்று இயக்குனரிடம் கூறினார். மேலும் படத்தை தாமதமாக பார்த்ததற்காக வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினியுடனான உரையாடல் லீக் ஆனது தனக்கு வருத்தமாக உள்ளதாக தேசிங் பெரிய சாமி தெரிவித்துள்ளார். அது தனிப்பட்ட போன் கால் என்பதால், தான், தனது ட்வீட்டில் கூட தலைவரின் பெயரை குறிப்பிடவில்லை எனவும், ஆனால் துரதிஷ்டவசமாக அது நடந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். எல்லாம் நன்மைக்கே என்று கூறியுள்ள அவர், அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

1newsnationuser1

Next Post

தாறு மாறாக உயரும் தங்கத்தின் விலை..! ஏழைகளால் இனி வாங்க இயலுமா?

Fri Jul 31 , 2020
சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று சவரனுக்கு 256 ரூபாய் உயர்ந்து ரூ.41,000 ஆக விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று இந்திய சந்தைகளில் மீண்டும் உயர்ந்தன. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 256 ரூபாய் உயர்ந்துள்ளது. ஊரடங்கு அமலுக்கு வந்த மார்ச் மாதத்தில் இருந்தே தங்கத்தின் விலை எந்த குறைவுமின்றி உயர்ந்துகொண்டே இருக்கிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5103 ஆக விற்கப்பட்ட நிலையில் இன்று […]
facebook post image 1592491469

You May Like