குறும்பட காதலால் குடும்பத்தில் பிரச்சனை..! 30 நாட்களில் வாழ்க்கையே கசப்பான சோகம்..! காதலை பிரித்து கடத்தி சென்ற பெண் வீட்டார்..! நீதிபதி முன்பு பெற்றோருக்கு ஆப்பு வைத்த மகள்..! மதுபோதையில் சொகுசு கார் விபத்து சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது எஜமானியுடன் கள்ள உறவு..! கணவரை மூங்கில் கூடையில் பார்சல் செய்து அனுப்பிய மனைவி..! வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி நிவர் புயலை பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் புதுக்கவிதை முழுமையாக கரையை கடந்த நிவர் புயல் குரூப்-2 நேர்முக தேர்வை ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..?

ஊரடங்கு காலத்தில் மக்களுக்காக தமிழ்புத்தாண்டில் சாலமன் பாப்பையா குழுவினரின் பட்டிமன்றம்.. எப்படி நடத்தினார்கள் தெரியுமா?

salman pattimantran

தமிழகத்தில் பொங்கல், தீபாவளி, ஆங்கில வருடப்பிறப்பு, தமிழ்வருடப்பிறப்பு என முக்கிய பண்டிகைகள் எதுவாக இருந்தாலும் நம் எல்லோர் வீடுகளுக்கும் தன்னுடைய குழுக்களோடு வருபவர் தான் சாலமன் பாப்பையா. ஆனால் ஊரடங்கு நேரத்தில் மக்களை கலையரங்கில் அமர வைத்து பட்டிமன்றம் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத நிலை தான் நீடித்துவந்தது.


இத்தகைய இக்கட்டான சூழலிலும், தொழில் நுட்ப வளர்ச்சியின் உதவியோடு ஆன்லைன் வீடியோ கால் மூலம் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தினை இணையதளத்தில் நடத்தியுள்ளது விகடன் டீம். தற்போதுள்ள ஊரடங்கு மக்களை பண்படுத்துகிறதா? பயமுறுத்துகிறதா? என்ற தலைப்பில் தான் தமிழ்ப்புத்தாண்டு நாளான இன்று பட்டிமன்றம் அரங்கேறியது.

சாலமன் பாப்பையா தலைமையில், புலவர் ராமலிங்கம், பாரதி பாஸ்கர், ராஜா, கவிதா ஜவகர் ஆகியோர் கலந்து கொண்டனர். வீடியோ கால் மூலம் நடத்தப்பட்ட பட்டிமன்றத்தில் ஊரடங்கு பண்படுத்துகிறதா என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம், பாரதி பாஸ்கரும், பயமுறுத்துகிறது என்ற தலைப்பில் ராஜா, கவிதா ஜவகர் ஆகியோர் நேர்த்தியாக பேசியுள்ளனர்.

பட்டிமன்றத்தில் அவர்கள் பேசிய ஒவ்வொரு தகவலும் தற்போது மக்கள் மனதில் இருந்து எழக்கூடியவையாக இருந்தது. குறிப்பாக ஊரடங்கு பண்படுத்துகிறது என்று பேசிய போது, மனிதாபிமானம் தான் தற்போது ஓங்கி நிற்கிறது என்றும், இயற்கை அழகாக மாறிவிட்டது என்று தெரிவித்தனர். டெல்லியின் ஒருவனுக்கு வலித்தால் கடைக்கோடியில் உள்ள நாம் அழுகிறோம். குடும்பத்தோடு ஒன்றாக நாட்களை கழிக்கிறோம் என்ற நிசர்தன உண்மையினை முன்வைத்தனர்.

salaman papaiyah

அதனை தொடர்ந்து ஊரடங்கு பயமுறுத்துகிறது என்ற பேசிய போது, அன்றாட வேலை செய்து நாட்களை கடப்பவர்களின் நிலை எல்லாம் நினைத்து க்கூட பார்க்க முடியவில்லை என்று தெரிவத்தனர். இந்த ஊரடங்கு நம்மை 20 ஆண்டுகள் பொருளாதாரத்தில் பின்னோக்கி தள்ளிவிட்டது. எதனை கண்டாலும் பயம் தான் என்ற எதார்த்த பேச்சினை முன்வைத்தனர்.

இறுதியாக பேசிய சாலமன் பாப்பையா, ஊரடங்கு மக்களை பண்படுத்துகிறதா, பயமுறுத்துகிறதா ?என்று பார்க்கும் போது ஒரு சில விஷயங்களில் பயப்படும் படி தான் உள்ளது. குறிப்பாக பொருளாதாரத்தில் பின்னோக்கி செல்கிறோம் என்றால் நம் நாடு மட்டுமில்லை உலக நாடுகளே அதனை தான் எதிர்க்கொண்டுள்ளது எனவே இதில் ஐயம் தேவையில்லை. குறிப்பாக இந்த கால கட்டம் கடைக்கோடியில் உள்ள மக்களையும் மனிதாபிமானத்தோடு வாழச்செல்கிறது என்பதனை பார்க்கும் போது ஊரடங்கு நம்மை பண்படுத்துவதாக தான் உள்ளது என கூறினார். மானுடம் சிலிர்க்கும், வெல்லும் என்பதோடு தனது பட்டிமன்றத்தை முடித்துவைத்தார்.

நிச்சயம் ஊரடங்கு நேரத்தில் கொண்டாடப்பட்டுவரும் புத்தாண்டு தமிழக மக்களுக்கும், சாலமன் பாப்பையா குழுவினரின் ரசிகர்களுக்கும் இந்த பட்டிமன்றம் ஒரு விருந்தாக தான் அமைந்திருக்கும்.. எப்படி இருந்தாலும் நாங்க முக்கிய பண்டிககைகளில் மக்களை சந்திக்காமலும், அவர்கள் இல்லங்களுக்கு செல்லாமல் இருக்க மாட்டோம் என்பதனை இந்த பட்டிமன்றத்தின் மூலம் உணர்த்திவிட்டனர்.

1newsnationuser3

Next Post

"அடுத்த ஒரு வருடத்துக்கு கிரிக்கெட் போட்டிகள் நடக்காது"

Tue Apr 14 , 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியால் இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் நடக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனாவின் தாக்கத்தால் தனது கணிப்பின்படி அடுத்த ஒரு வருடத்திற்கு எந்த கிரிக்கெட் போட்டிகளும் நடக்காது என்றும் குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடப்பதாக இருக்கும் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியும் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை […]
Aktar

You May Like