ஆடுகளை வெளிநாடுகளில் எப்படி ஏற்றுமதி செய்றாங்க தெரியுமா?

உள்நாட்டிலேயே ஆடுகளுக்கு மவுசு அதிகரித்துள்ள நிலையில் வெளிநாடுகளில் ஆடுகளுக்கு கூடுதல் வரவேற்புதான் அதை வெளிநாடுகுளில் பிற நாடுகளுக்கு  எவ்வாறு ஏற்றுமதி செய்கின்றார்கள் என்பதை பற்றி இதில் பார்க்கலாம்.

தாவரங்களை உண்டு வாழும் பாலூட்டியான ஆடு தென்மேற்கு ஆசியா, கிழக்கு ஐரோப்பாவை தாயகமாக கொண்ட ஆடு மனிதனால் வெகு காலத்திற்கு முன்பே பழக்கப்பட்ட விலங்குகளில் ஒன்றாகும். ஆடுகளில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளது.

ஆடுகள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வளர்க்கப்பட்டு வந்ததாக ஆதாரங்கள் கூறுகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆடுகள் அவற்றின் இறைச்சி, பால், முடி, தோல் ஆகியவற்றிற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தக்காலத்தில் இதை செல்லமாக வீட்டு விலங்காகவும் வளர்த்து வருகின்றனர்.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின்படி கணக்குப்படி உலகம் முழுவதும் 92.4 கோடி ஆடுகள் வளர்க்கப்படுகின்றது. மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகளில் ஆடும் ஒன்று. அனடோலியாவிலுள்ள சக்ரோஸ் மலைத்தொடர் தான் ஆடுகளின் பூர்வீகம் என்று மரபணு சோதனைகள் நமக்குக் காட்டுகின்றன. ஆடுகளில் இனத்தைப் பொறுத்து உடல் எடை வேறுபடுகிறது. சிறிய ஆடுகள் 20-27 கிலோ எடையில் இருந்து பெரிய ஆடுகளான போயர் ஆடு போன்றன 140 கிலோ எடை வரை வளருகின்றன.

பெரும்பாலான ஆடுகளுக்கு இயற்கையாகவே இரண்டு கொம்புகள் உண்டு. அவற்றின் வடிவமும் அளவும் ஆட்டினத்தைப் பொறுத்து மாறுபடும். இவற்றின் கொம்புகள் கெரட்டின் முதலான புரதங்களால் சூழப்பட்ட எலும்புகளால் ஆனவை. ஆட்டின் கொம்புகள் அவற்றின் பாதுகாப்புக்காவும் அவற்றின் ஆதிக்கத்தையும் எல்லையைக் காக்கவும் பயன்படுகின்றன.

ஆடுகள் அசை போடும் விலங்குகள் இவை நான்கு அறை கொண்ட இரைப்பையைக் கொண்டுள்ளன. மற்ற அசை போடும் விலங்குகளைப் போலவே இவையும் இரட்டைப் படையிலான குளம்புகளைக் கொண்டுள்ளன. பெட்டையாடுகளின் மடியில் இரு காம்புகள் உள்ளன.

எனினும் விதிவிலக்காக போயர் ஆட்டுக்கு மட்டும் எட்டு காம்புகள் வரை இருக்கலாம். ஆடுகளுக்கு கண்ணின் கருமணியானது கிடைமட்டமாக கோடு போன்று காணப்படுகிறது. பொதுவாக ஆடுகள் 15 முதல் 18 ஆண்டுகள் உயிர்வாழ்கின்றன. இறைச்சியும் பாலும் பெறுவதற்காக ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. ஆட்டிறைச்சி பொதுவாக தெற்காசிய நாடுகளில் கோழியிறைச்சிக்குப் பிறகு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

அப்படிப்பட்ட ஆடுகளை வெளிநாட்டில் எப்படி எல்லாம் ஏற்றுமதி செய்றாங்கனு பாருங்க இதுல இவ்ளோ விஷயம் இருக்கானு நீங்கள் வியந்து போவீர்கள் !

Next Post

பொதுமக்களே கவனம்...! இந்த 10 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது...! முழு விவரம் இதோ...

Sun Oct 30 , 2022
நவம்பர் மாதத்தில் 10 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு அதிக அளவில் விடுமுறை வழங்கப்பட்டது ஆனால் நவம்பரில் 10 நாட்களுக்கு மட்டுமே வங்கி விடுமுறைகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பண்டிகை நாட்கள் முடிந்துவிட்டதால், குருநானக் ஜெயந்தி, கார்த்திகை பூர்ணிமா, ரஹஸ் பூர்ணிமா போன்ற சில நிகழ்வு காரணமாக விடுமுறை இருக்கும். வழக்கம் போல வங்கி விடுமுறை நாட்களில் இரண்டாவது மற்றும் நான்காவது சனி […]

You May Like