அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

கொரோனாவை விட உலகத்திற்கு காத்திருக்கும் அடுத்த மிகப்பெரிய பேரழிவு என்ன தெரியுமா? எச்சரிக்கும் ஆய்வாளர்கள்..!

இன்றளவும் மனிதன், உலகில் உள்ள மற்ற உயிரினங்களை கட்டுப்படுத்தி, உலகையே ஆட்சி செய்ய முடிகிறது. மனிதனின் இந்த ஆதிக்க செயல்பாடுகள், இயற்கையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


அதில், ராட்சத தொழிற்சாலைகள், வாகனங்கள் உள்ளிட்ட நவீன கூறுகளாலும், அதிலிருந்து வெளிப்படும் மாசுகளாலும், கால நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு, உலகம் வெப்பமயமாகி கொண்டிருப்பதை தொடர்ச்சியாக பதிவு செய்துள்ளனர்.

கொரோனாவை விட உலகத்திற்கு காத்திருக்கும் அடுத்த மிகப்பெரிய பேரழிவு என்ன தெரியுமா? எச்சரிக்கும் ஆய்வாளர்கள்..!

இந்நிலையில், காலநிலை மாற்றம் காரணமாக இந்தியப் பெருங்கடலில் எல் நினோ போன்ற அசாதாரணமான சூழல் உருவாகும் என கால நிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது உலகம் முழுவதும் வெள்ளம், புயல் மற்றும் வறட்சி போன்ற தீவிரமான காலச்சூழலை உருவாக்கும் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர். அதில் முக்கியமான ஒன்று தான் எல் நினோ நிகழ்வு.

எல் நினோ நிகழ்வு என்றால் என்ன?

கடல் மற்றும் வளிமண்டல சுழற்சியில் ஏற்படும் வெப்பம், காற்றின் மாறுதல்கள் மற்றும் அதனால் எற்படும் விளைவுகளால் உலக நாடுகளில் உள்ள சில பகுதிகளில் பருவநிலைகளில் பாதிப்புக்களை உண்டாக்கும். இதைத்தான் கால நிலை ஆராய்ச்சியாளர்கள் எல் நினோ என கூறுகின்றனர்.

குறிப்பாக, புவி வெப்பமயமாதலின் காரணமாகப் புவியின் கிழக்கு மற்றும் மத்திய பசிபிக் பெருங்கடலில் ஏற்படக்கூடிய ஒர் ஒழுங்கற்ற காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துவது எல் நினோ விளைவு. இதன் காரணமாக, உலகின் பல இடங்களில் பெரு மழை, வெள்ளம், கடும் வறட்சி உள்ளிட்ட பேரழிவுகள் நிகழும். இந்தியப் பெருங்கடலில் தோன்றும் எல் நினோ, பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, டெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த குழு ஒன்று ஆய்வு மேற்கொண்டது. அதில், இந்த நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் காலநிலை மாற்றம் எவ்வாறு இருக்கும் என்பதைக் காட்டும் மாதிரிகளை அந்த ஆய்வு குழு உருவாக்கியது. அவர்களின் கண்டுபிடிப்புகளின் படி, இந்தியப் பெருங்கடல் இன்றைய காலநிலையை விட மிகவும் வலுவான காலநிலை மாற்றங்களை உண்டாக்கும் திறனைக் கொண்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

மேலும், இந்திய பெருங்கடலில் ஏற்படும் கால நிலை மாற்றத்தை அவர்கள் மதிப்பிட்டதில் 2100ஆம் ஆண்டளவில் மக்களை பாதிக்கக்கூடும் என்பதை எச்சரிக்கை செய்யும் வகையில் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், உலகம் முழுவதும் இதே போன்ற வெப்பமயமாதல் போக்குகள் தொடர்ந்தால் 2050ஆம் ஆண்டிலேயே கூட இந்த பேரழிவுகள் உலகை தாக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் மாற்றங்களால், அதனை சுற்றியுள்ள நாடுகளான இந்தியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் கிழக்கு ஆபிரிக்கா போன்ற நாடுகளில் தீவிர காலநிலை நிகழ்வுகள் அதிகரிக்கும் தீவிரத்துடன் இருக்கும்.

ஏற்கனவே, கொரோனா வைரஸ் பேரழிவில் இருந்து மீள மனித குலம் திணறிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்து வரும் கால நிலை மாற்றம் எனும் பேராபத்தை கண்டுகொள்ளாமல் விடுவது, நமது அழிவுக்கு நாமே குழி தோண்டுவது போல் அமையும் என்பது மட்டும் நிச்சயம்.

1newsnationuser4

Next Post

கிராமத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பாஸிடிவ்..! ஒரே ஒருத்தர தவிர...!

Sat Nov 21 , 2020
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் நாளுக்கு சராசரியாக 1500 புதிய கொரோனா வைரஸ் கேஸ்கள் பதிவாகி வருகிறது. ஆனால் வடஇந்தியாவில் சில பகுதிகளில் நிலைமை இன்னும் மோசமாகிக் கொண்டு தான் இருக்கிறது. டெல்லி, இமாச்சல பிரதேசம் போன்ற இடங்களில் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் லஹூவால் என்ற மாவட்டம் அதிகமாக கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அங்குள்ள ஸ்பிடி பள்ளத்தாக்கின் […]
lahaul spiti 1

You May Like