“ஒல்லிக்குச்சி உடம்புக்காரி..” அஜித் பட ஹீரோயினை ஞாபகம் இருக்கா..? இப்ப எங்க இருக்காங்க தெரியுமா..?

பொதுவாகவே சினிமாவில் ஹீரோக்கள் அளவுக்கு ஹீரோயின்கள் யாரும் நீண்ட காலம் நிலைத்திருப்பதில்லை. காலம் மாற, மாற ஹீரோயின்களும் மாறிக் கொண்டே தான் இருப்பார்கள்.. இன்னும் சொல்லப் போனால் 80களில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், தற்போது கொடுக்கப்படுவதில்லை. எனினும் நயன்தாரா, த்ரிஷா போன்ற சில நடிகைகள் தற்போதும் டாப் ஹீரோயின்களாக வலம் வருகின்றனர். ஆனால் அவர்களும் கூட பல சரிவுகளை சந்தித்து, அதன்பின்னர் தங்களுக்கான பாதையை தேர்ந்தெடுத்து ரீ – எண்ட்ரி மூலமே தற்போதும் தங்களை முன்னணி நடிகைகளாக தக்கவைத்து கொண்டுள்ளனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரே படத்தின் மூலம் பிரபலமடைந்து, அதன் பின்னர் காணாமல் போன நடிகைகளில் ஒருவர் தான் பிரியா கில்.. 1995-ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா போட்டியில் 2-வது இடத்தைப் பிடித்தவர் பிரியா கில்.. இவர் 1996 இல் தேரே மேரே சப்னே என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார்.. பின்னர் 1999 ஆம் ஆண்டு வெளியான சிர்ஃப் தும் என்ற ஹிந்தி படத்தின் மூலம் அவர் பிரபலமானார்.. பஞ்சாபி, மலையாளம், தமிழ், போஜ்புரி மற்றும் தெலுங்கு மொழிகளில் தலா ஒரு படத்தில் நடித்தார்.. இதனை தொடர்ந்து அவருக்கு ஹிந்தி படங்களில் நடிக்கவே அதிக வாய்ப்பு கிடைத்தது..

ஹிந்தியில் பல படங்களில் நடித்திருந்த பிரியா கில், 2001-ம் ஆண்டு வெளியான அஜித்தின் ரெட் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்போது பெரிதும் பேசப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர். ஆனால் ரெட் படத்திற்கு பிறகு அவர் எந்த தமிழ்ப் படத்திலுமே நடிக்கவில்லை. பல முயற்சிகளுக்குப் பிறகு, 2006ல் பாலிவுட்டில் இருந்து ஒதுங்கினார்.

கடந்த 17 ஆண்டுகளாக திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்தார். பிரியா கில் கடைசியாக 2006 ஆம் ஆண்டு போஜ்புரி திரைப்படமான பியா தோஸ் நைனா லகே படத்தில் நடித்தார். இந்நிலையில் நடிகை பிரியா கில் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.. நடிகை பிரியா கில் தற்போது டென்மார்க்கில் வசித்து வருவதாகவும், தனது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அவர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இல்லாததால் அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை..

Maha

Next Post

போலீசில் மாட்டாமல் திருடுவது எப்படி…? யூடியூபில் வீடியோ பார்த்து திருடிய இருவர்….! போலீசில் சிக்கியது எப்படி….?

Tue Feb 7 , 2023
Youtube வலைதளம் என்பது அதில் பலருக்கும், பலவிதத்தில் உபயோகமாக இருக்கிறது. ஆனால் அந்த youtube வலைதளத்தில் எதுவும் தெரியாத நபர்கள் கூட அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம் அந்த அளவிற்கு youtube சாதனம் எல்லோருக்கும் பயன்படும் விதமாக இருந்து வருகிறது. பல்வேறு நல்ல விஷயங்களுக்கும் இந்த youtube வலைதளம் பயன்படுகிறது. அதேபோல பல சமூக விரோத செயல்களுக்கும் இந்த youtube வலைதளம் பயன்படுகிறது என்பதை கேட்டால் சற்று பரிதாபமாக தான் இருக்கிறது.ஆனால் […]

You May Like