உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா…? இப்படி ட்ரை பண்ணுங்க!

தினந்தோறும் மஞ்சள் தண்ணீரை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். மேலும் இதில் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

அதிக எடை அல்லது உடல் பருமன் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.உடல் எடையை குறைப்பதற்காகப் பல பொருட்கள் மார்க்கெட்டில் கிடைத்தாலும், சீரான வாழ்க்கை முறையும், ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவையும் சாப்பிடுவது ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் எடை கட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும். இந்தநிலையில், உடல் எடை குறைப்பது உள்ளிட்ட பிரச்சனைகளை சரிசெய்யும் மஞ்சள் வாட்டர் பற்றி பார்க்கலாம். மஞ்சள் தண்ணீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதனை உட்கொள்வதன் மூலம் மூட்டு வலியில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். இதனுடன், உங்கள் செரிமானம் மற்றும் கல்லீரலும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆயுர்வேதத்தில் மஞ்சள் ஒரு மூலிகையாக கருதப்படுகிறது. ஏனெனில் மஞ்சளில் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், கால்சியம், நார்ச்சத்து, இரும்பு, தாமிரம், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல ஆரோக்கியமான பண்புகள் உள்ளன. மஞ்சளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மஞ்சளில் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிவைரல் பண்புகள் உள்ளன, இது உங்கள் உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இதனுடன், மஞ்சள் தண்ணீரை குடிப்பதால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

மஞ்சள் நீர் வாயு மற்றும் வயிறு தொடர்பான பல பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. அதுமட்டுமின்றி மஞ்சள் தண்ணீரை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். மேலும் இதன்மூலம், உடலில் சேரும் நச்சுகள் எளிதில் அகற்றப்படும். மஞ்சள் நீர் எலும்பு வலி அல்லது பருவகால காய்ச்சலால் ஏற்படும் உடல் வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.

இத்தனை நன்மைகள் உள்ள மஞ்சள் தண்ணீரை தயாரிக்கும் முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். பின்னர் அதில் கூடுதலாக ஒரு கப் தண்ணீர் ஊற்றவும். அதன் பிறகு, அதில் ஒரு சிறிய ஸ்பூன் மஞ்சள் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு அதை வடிகட்டி அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு (விரும்பினால்) கலந்து சூடாக குடிக்கவும்.

Kokila

Next Post

பெண்களைவிட ஆண்களை அதிகம் பாதிக்கும் வயிற்று புற்றுநோய்..! ஆய்வில் அதிர்ச்சி!

Sat Feb 11 , 2023
வயிற்று புற்றுநோய் பெண்களைவிட ஆண்களை அதிகளவில் பாதிப்பதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகை புற்றுநோய் எப்படி ஏற்படுகின்றன, சிகிச்சை முறைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் உலக அளவில் மனிதர்களுக்கு வரும் கொடியநோய்களில் இதய நோய்களை அடுத்து புற்றுநோய்களால்தான் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர். 2021 ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு கோடியே எழுபத்து மூன்று இலட்சமாக இருந்த புற்றுநோயாளிகள் எண்ணிக்கை வரும் 2025 ஆம் ஆண்டில் […]
’

You May Like