பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு மாணவியின் தாயாரை சந்திக்க கூட நேரமில்லையா? – அண்ணாமலை காட்டம்

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்? ஆளும் திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். காவல்துறையினர் மீது மரியாதை இழந்து விட்டனர். கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி அவர்கள் விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார். உளவுத்துறை ஏடிஜிபி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே ஆர்வமாக இருக்கிறார். மாணவி ஸ்ரீமதியின் தாயாரைச் சென்று சந்திக்கக் கூட நேரமில்லாத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு மாணவியின் தாயாரை சந்திக்க கூட நேரமில்லையா? - அண்ணாமலை காட்டம்

இவை அனைத்தும் ஒரு திறனற்ற அரசின் வெளிப்பாடாகவே தெரிகிறது. தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் அம்மாவட்டத்தைச் சேராதவர்களாக இருக்க வேண்டும் மற்றும் தமிழக பாஜக இதற்கு முன் கூறியது போல் இந்த வழக்கின் விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்”. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Chella

Next Post

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்..! சாம்பியன் பட்டத்தை வென்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து..!

Sun Jul 17 , 2022
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் சீனா வீராங்கனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் பி.வி.சிந்து. சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சீன வீராங்கனை வாங் சியை 21 -9, 11-21, 21-15 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து வீழ்த்தினார். முன்னதாக நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜப்பானிய வீராங்கனை சயானா கவாகாமியை 21-15,21-7 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து தோற்கடித்தார். சிங்கப்பூர் ஓபன் போட்டியில் […]
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்..! சாம்பியன் பட்டத்தை வென்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து..!

You May Like