சென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!

“என் கருத்துகளை கேட்காமல் என்னை கொண்டாட வேண்டாம்..” மோடியின் பெண்கள் தின மரியாதையை நிராகரித்த 8 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர்..

என்னுடைய கருத்துகளை கேட்காமல் என்னை கொண்டாட வேண்டாம் என்று கூறி, பிரதமர் மோடியின் பெண்கள் தின மரியாதையை 8 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் நிராகரித்துள்ளார்.

licypriya and modi

பெண்கள் தினத்தை முன்னிட்டு சாதனை பெண்களை கவுரவிப்பதற்காக #SheInspireUs என்ற பிரச்சாரத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட மோடி “வாழ்க்கையில் மற்றும் பணியில் மற்றவர்களுக்கு முன்னுதரணமாக விளங்கும் பெண்கள், இந்த மகளிர் தினத்தன்று எனது சமூக வலைதள பக்கங்களை நிர்வகிக்கிலாம். இது லட்சக்கணக்கானவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமையும்” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் அதுபோன்ற சாதனைப் பெண்களின் கதைகளை #SheInspiresUs என்ற ஹேஷ்டாகின் மூலம் பகிரலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் தேர்ந்தெடுக்கப்படும் பெண்களுக்கு மோடியின் சமூக வலைதளப் பக்கங்களில் கருத்துகளை பதிவிடும் வாய்ப்புகள் வழங்கப்படும்.

modi

இதனைத் தொடர்ந்து இந்திய அரசின் அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “ மணிப்பூரை சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் லிசிபிரியா கங்குஜம் என்ற சிறுமியை சாதனைப் பெண்களில் ஒருவர். 2019-ம் ஆண்டு அப்துல்கலாமின் குழந்தைகளுக்கான விருதை பெற்றவர். உலக குழந்தைகளுக்கான அமைதி பரிசு, இந்திய அமைதி பரிசு ஆகியவற்றையும் வென்றுள்ளார். அவர் ஊக்கமளிக்கவில்லையா..? லிசியை போல வேறு பெண்களை உங்களுக்கு தெரியுமா..? #SheInspireUs என்ற ஹேஷ்டாகில் கீழ் எங்களுக்கு தெரியப் படுத்துங்கள்” என்று பதிவிட்டிருந்தது.

எனினும் பிரதமர் மோடியின் இந்த மரியாதையை ஏற்க மறுப்பதாக லிசி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர் “ அன்புக்குரிய நரேந்திர மோடி அவர்களே.. என்னுடைய கருத்துகளை கேட்காமல் என்னை கொண்டாட வேண்டாம். உங்கள் வழிகாட்டுதலின் பேரில் தொடங்கப்பட்ட #SheInspireUs பிரச்சாரத்தில், நாட்டின் ஊக்கமளிக்கும் பெண்கள் பட்டியலில் என்னை தேர்ந்தெடுத்தற்கு நன்றி. ஆனால், பலமுறை யோசித்த பிறகு இந்த மரியாதையை நிராகரிக்க முடிவு செய்துள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல அவர் வெளியிட்டுள்ள மற்றொரு ட்வீட்டில் “ அரசு என்னுடைய குரலை கேட்காமல், இன்று என்னை நாட்டின் ஊக்கமளிக்கும் பெண்களில் ஒருவராக தேர்ந்தெடுத்துள்ளது. இது நியாமா..?” என்று குறிப்பிட்டுள்ளார்.

8 வயதேயான லிசிபிரியா இந்தியாவின் கிரேட்டா தன்பர்க் என்று அழைக்கப்படுகிறார். காலநிலை மாற்றங்களுக்கு உலகத் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு காலநிலை மாற்றம் குறித்து மங்கோலியாவில் நடைபெற்ற மாநாட்டில் உலகத் தலைவர்களிடையே உரையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது

1newsnationuser1

Next Post

ஆண்ட்ராய்ட் ஆக மாறுகிறதா ஆப்பிள்..?

Sat Mar 7 , 2020
ஆப்பிள் நிறுவனம் தனது சொந்த சேவைகளை பிரபலபடுத்தும் நோக்கில், தனது விதிமுறைகளை தளர்த்தி விளம்பர நோடிபிகேஷன்களை அனுமதித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் சிறப்பு என்பதே, அதன் பாதுகாப்பும் தேவையற்ற விளம்பரங்களின் தொந்தரவு இல்லாததுமே ஆகும். ஆனால், அத்தகைய முக்கிய அம்சத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. முன்னதாக, கடந்த 2018-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட கார்பூல் கரோக்கி இசை நிகழ்ச்சியை விளம்பரப்படுத்த ஐபோன் நிறுவனம் […]
4 146 47

You May Like