வெங்காயத்தை இவர்கள் சாப்பிட வேண்டாம்! பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதால் ஆபத்து!

வெங்காயத்தை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உள்ளன. இருப்பினும், அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பல விதவிதமான உணவு வகைகள் மற்றும் பல்வேறு ருசி கொண்ட உணவு வகைகள் அதிகம் இருக்கிறது. தங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிடும் ஆர்வத்தில் மக்கள் கவனம் செலுத்த மறந்து விடுகின்றனர், இதனால் நமது ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தநிலையில், நமது உடல் ஆரோக்கியத்திற்காக பல்வேறு உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். நம் அன்றாட சமையளில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான காய்கறி வகைகளுள் ஒன்று வெங்காயம். வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் நம் உடலுக்கு அவசியம் தேவை என்பதையும், வெங்காயத்தில் உள்ள எண்ணற்ற மருத்துவ குணங்களையும் நாம் அறிந்திருப்போம்.

அந்தவகையில் வெங்கயாத்தை அதிகளவு பயன்படுத்துவதால் நம் உடலில் பல்வேறு தீமைகளும் ஏற்படுகின்றன. வெங்காய சாறு இரத்த உறைதலை குறைத்து இரத்த போக்கை அதிகரிக்கிறது. இதனால், இரத்தப்போக்கு கோளாறு உடையவர்கள் வெங்காய சாற்றை உட்கொள்ளும் போது கவனம் தேவை. அஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் வெங்காயச் சாறு சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இது அமில ரிஃப்ளக்ஸ் தொடர்பான பிரச்சினைகளை உருவாக்கலாம். ஏற்கனவே நீரிழிவு மருந்துகளை உட்கொண்டிருந்தால் வெங்காயம் சாறு இரத்த சர்க்கரை அளவை அதிகமாக குறைக்கலாம். எனவே மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொள்வது நல்லது.

Kokila

Next Post

சிகப்பழகு பெறவேண்டுமா?... ABC-ஜூஸ் குடிங்க...ஏராளமான நன்மைகள் இதோ!

Tue Feb 7 , 2023
உடலில் உள்ள கழிவுகளை அகற்றவது, உடல் எடையை குறைப்பது, சருமத்தை பொழிவாக்குவது உள்ளிட்டவைகளுக்கு ஏபிசி என்ற ஆப்பிள், பீட்ரூட், கேரட் கலந்த ஜூஸில் பெரிதும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஏராளமான நன்மைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். உடலுக்கு அதிக அளவில் வைட்டமின்கள் தேவைப்படுவதால் காலை வேலைகளில் இது போன்ற ஜீஸ்ஸை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு நன்மை கிடைக்கும். துரித உணவுகளைத் தவிர்த்துவிட்டு இது போன்ற உணவுகள் உட்கொண்டால் உடல் […]

You May Like