’இனி வங்கிகளில் கடன் வாங்கும்போது இதை மறந்துறாதீங்க’..!! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ரிசர்வ் வங்கி..!!

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கும்போது நிறைய மறைமுக கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதுபோன்ற கட்டணங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பது பொதுவாகவே வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், மறைமுக கட்டணங்கள் அனைத்தையும் முன்கூட்டியே வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கும்போது, கடன் தொகைக்கு வட்டி விகிதம் விதிக்கப்படும். இந்த வட்டியுடன் பிராசஸிங் கட்டணம், ஆவணக் கட்டணம் என பல்வேறு மறைமுகக் கட்டணங்களும் வசூலிக்கப்படுகின்றன. மறைமுகக் கட்டணங்கள் பற்றி வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த ஆர்பிஐ நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு கடனுக்கும் வழங்கப்படும் விவர அறிக்கையில் கடனுக்கான பிராசஸிங் கட்டணம், ஆவணக் கட்டணம் போன்ற விவரங்களையும் வெளியிட வேண்டும் என தற்போது உத்தரவிட்டுள்ளது.

இது வங்கிகள் மட்டுமின்றி நிதி நிறுவனங்கள், டிஜிட்டல் கடன் செயலிகள் ஆகியவற்றிற்கும் பொருந்தும். வீட்டுக் கடன், வாகனக் கடன், நகைக் கடன், தனிநபர் கடன் போன்ற சிறு கடன்கள் மட்டுமின்றி, சிறு குறு நடுத்தர தொழில் கடன்களுக்கும் இந்த விதிமுறையை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, இனி வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கும்போது கூடுதல் கட்டணங்கள் பற்றி ஒருவர் சுலபமக தெரிந்துகொள்ள முடியும்.

1newsnationuser6

Next Post

ஜெயலலிதா வழங்கிய யானைகளுக்கு கொடுமை!… பாகனின் இரக்கமற்ற செயல்!… வலி தாங்க முடியாமல் பிளிறும் அவலம்!

Sat Feb 10 , 2024
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குருவாயூர் கோவிலுக்கு வழங்கிய யானைகளை பாகன்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான யானைகள் பராமரிப்பு மையம் மம்மியூர் பகுதியில் இருக்கிறது. இந்த மையம் யானை கோட்டை என்று அழைக்கப்படுகிறது. அங்கு 30-க்கும் மேற்பட்ட யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே யானைகளை பராமரித்து வரும் 2 பாகன்கள் […]

You May Like