உங்கள் பேஸ்புக்கிற்கு ஆபத்து… பிளே ஸ்டோரிலிருந்து திடீரென நீக்கப்பட்ட செயலிகள்… சீன செயலியை தடைசெய்த பிரதமர் மோடி, தன் வெய்போ கணக்கில் என்ன செய்தார் தெரியுமா? சாத்தான்குளம் கொலை வழக்கு… அப்ரூவர் ஆகும் அடுத்த போலீஸ்…. லடாக்கில் போர் பதற்றம்… இருபுறமும் இராணுவ வீரர்கள் குவிப்பு… உச்சத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை! எப்போது குறையும்? இனி பிரிட்ஜில் வைக்க தேவை இல்லை! உணவு பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க சில டிப்ஸ்…. சாத்தான்குளம் விவகாரம்: தப்ப முயன்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது மூக்கிரட்டை கீரை பற்றி தெரியுமா? நீளும் பட்டியல்..அடுத்தடுத்து சீனாவிற்கு குவியும் தடைகள்..மத்திய அரசு தடாலடி உடல் எடையை குறைக்கும் டீ! சாத்தான்குளம் விவகாரம்: ஓடி ஒளிந்த எஸ்.ஐ உள்ளிட்ட 4 காவலர்கள்..நள்ளிரவில் தூக்கிய சி.பி.சி.ஐ.டி இந்தியாவில் 6 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இன்னும் 3 நாட்களில் உலகளவில் 3-வது இடத்தை எட்டும் அபாயம்.. ‘இந்திய ஊழியர்களுக்கு ஒரு செய்தி..’ மத்திய அரசு தடை விதித்த பிறகு, டிக்டாக் CEO கடிதம்.. சாத்தான்குளம் கொலை வழக்கு.. எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது.. சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை.. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது – அரசு அறிவிப்பு

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு திணறி வருவதாகவும், கொரோனா விவகாரத்தில் அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்படவில்லை என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இதற்கு பதலளிக்கும் விதமாக விஜயபாஸ்கர் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோவில் பேசிய அவர் “ உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளே கொரோனாவில் இருந்து எப்படி மீள்வது என்று விழித்துக் கொண்டிருக்கும் வேளையில், தமிழக அரசு ஆரம்பத்தில் இருந்தே கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த இக்கட்டான சூழலில், அரசு நோயை கட்டுப்படுத்தி வருகிறது.

vijaya bhaskar 1

தமிழகத்தில் அதிக பரிசோதனைகள் செய்யப்படுவதால் தான், அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. நோயை முதலிலேயே கண்டுபிடிப்பதால் தான் அதிகமாக குணப்படுத்த முடிகிறது. இதுவை 25,344 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்த சூழலில் அரசு திணறி வருகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பது முற்றிலும் தவறானது. அரசு இன்று மிகத் திறமையாக செயல்படுகிறது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை வைத்து அரசியலாக்க வேண்டாம். அரசு இன்று வெளிப்படையாக இருக்கிறது. எந்த தகவலையும் மறைக்கவில்லை. தமிழக அரசின் நடவடிக்கைகளை ஐ.சி.என்.ஆர் பாராட்டியுள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக பரிசோதனை மையங்கள் உள்ளன. தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களை எதிர்க்கட்சி தலைவர் பாராட்டி உள்ளாரா..? பாராட்ட மனம் இல்லை என்றாலும், பரவாயில்லை.. விமர்சிக்க வேண்டாம்” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

குஜராத்தில் இரண்டாவது நாளாக மீண்டும் நிலநடுக்கம்

Mon Jun 15 , 2020
குஜராத்தில் தொடர்ந்து 2வது நாளாக இன்று பிற்பகலிலும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் ராஜ்கோட் பகுதியில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதால் அச்சமடைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். ராஜ்கோட்டிலிருந்து வடமேற்கில் 122 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்திருந்தது. ஆனாலும் பெரியளவிலான பாதிப்புகள் பதிவாகவில்லை. இந்நிலையில் இன்றும் ராஜ்கோட் சுற்றுவட்டாரப் பகுதியில் பிற்பகல் 12.57 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான […]
earth quake cuba

You May Like